பாரதியின் செல்லம்மா!

Source: SBS Tamil
தமிழ் கவிஞரும், எழுத்தாளரும், விடுதலை போராட்ட வீரருமான பாரதியின் கவிதைகளைச் சேகரித்து இவ்வுலகிற்கு வழங்கியவர்களில் முக்கியமானவர் அவரது மனைவி செல்லம்மா. செல்லம்மாவை பற்றி "பாரதியின் செல்லம்மா" என்ற பெயரில் புத்தகம் எழுதியிருக்கிறார் கடையத்தைச் சேர்ந்த 81 வயதான புலவர் வெய்கைமுத்து அவர்கள். அதிகம் பேசப்படாத செல்லம்மாவை பற்றி பேசுகிறது இந்தப் புத்தகம். பாரதியின் பிறந்ததினத்தையொட்டி இந்நூல் தொடர்பில் புலவர் வெய்கைமுத்துவுடன் உரையாடுகிறார் றேனுகா.
Share



