SKIP TO MAIN CONTENT

Census 2026: உங்கள் தகவல்கள் ஏன் சேகரிக்கப்படுகின்றன?

A4 Census booklet open on table, as a women uses a pen to fill in the form.
Avustralya'da yeni nüfus sayımı 11 Ağustos 2026 tarihinde yapılacak. Credit: Australian Bureau of Statistics

2026 Census மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்கள் விசா நிலை, உங்கள் குழந்தையின் கல்வி அல்லது ஆஸ்திரேலியாவில் உங்களுக்குள்ள உரிமைகள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் சமூகத்தைப் பற்றி அரசாங்கம் நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சேவைகளைத் திட்டமிட, அந்தத் தகவல்கள் முக்கியமானவை.


Published

Updated

By Olivia Di Iorio

Presented by Saranya Balakrishnan

Source: SBS



Skip to podcast episode content

2026 Census மக்கள் தொகை கணக்கெடுப்பில் நீங்கள் அளிக்கும் பதில்கள் உங்கள் விசா நிலை, உங்கள் குழந்தையின் கல்வி அல்லது ஆஸ்திரேலியாவில் உங்களுக்குள்ள உரிமைகள் மீது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் சமூகத்தைப் பற்றி அரசாங்கம் நன்றாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சேவைகளைத் திட்டமிட, அந்தத் தகவல்கள் முக்கியமானவை.


மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, நாடு முழுவதிலுமிருந்து மிகப்பெரிய அளவில் தகவல்களைச் சேகரிக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொருவரும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்வது கட்டாயமாகும்.

ஆஸ்திரேலிய மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம், பின்னணி, சமூக நிலை, வருமானம், வேலை மற்றும் குடியிருப்பு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

தனிநபர்கள் வழங்கும் இந்தத் தகவல்கள், ஒரு சமூகத்தின் தேவைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. குறிப்பாக, பல்வேறு கலாச்சார மற்றும் மொழிப் பின்னணியைக் கொண்ட சமூகங்களுக்குத் தேவையான உள்ளூர் சேவைகளைத் திட்டமிட இது உதவுகிறது" என்று, SBS Examines-இடம் பேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் Emily Walter தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தகவல்களை வழங்குவது குறித்து கவலைப்படுபவர்கள், தாங்கள் வழங்கும் தகவல்கள் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைக்கப்படுகின்றன.

தனியுரிமைச் சட்டமும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் சட்டத்தின் இரகசியத்தன்மை விதிகளும், ஒருவரையோ அல்லது அவர்களின் குடும்பத்தையோ அடையாளம் காணக்கூடிய வகையில் அவர்களின் தகவல்களைப் பகிர அனுமதிக்கவில்லை. மேலும் பெயர்களையும் முகவரிகளையும் அந்தத் தரவுகளுடன் நாங்கள் ஒருபோதும் இணைத்து வைத்திருக்க மாட்டோம் அந்தத் தகவல்கள் ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்திலேயே பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் குடிவரவுத் துறை உட்பட வேறு எந்த அரசுத் துறைக்கும் அவை பகிரப்படுவதில்லை," என்று Emily Walter தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு குறித்து மேலும் அறிந்துகொள்வதற்காகவும், நீங்கள் அளிக்கும் பதில்களுக்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பாக பரவி வரும் தவறான தகவல்களுக்கு விளக்கம் அளிப்பதற்காகவும், ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்துடன் SBS Examines இந்தப் பகுதியில் பேசுகிறது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Census 2026 Misinformation


To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now