ஆஸ்திரேலியர்கள் தங்கள் பூங்காக்களை விரும்புகிறார்கள், அவற்றை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த பசுமையான இடங்கள் நாய்களுடனான நடைபயிற்சி, ஓய்வெடுத்தல், உடற்பயிற்சி, நண்பர்களுடனான ஒன்றுகூடல், சமூகக் கூட்டங்கள், சுற்றுலா, barbecues, நிகழ்வுகளை நடத்துதல் உட்பட பலவற்றிற்கு பயன்படுகின்றன.
நீங்கள் வழக்கமாக பூங்கா ஒன்றுக்கு செல்பவராக இருந்தாலும் அங்கு செல்லும்போது நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் சில நடத்தை சார்ந்த நெறிமுறைகள் இந்த பூங்காக்களை சிறப்பாகப் பயன்படுத்த உதவும், அதே நேரத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உறுதி செய்யும்.
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை 50,000 க்கும் மேற்பட்ட நகர பூங்காக்கள் உள்ளன.
சிட்னியில் மட்டும், pocket parks மற்றும் suburban reserves முதல் பாரம்பரிய பட்டியலில் உள்ள தோட்டங்கள் வரை சுமார் 400 உள்ளன.
இத்தகைய பசுமையான இடங்களுக்கான பொறுப்பு மாநில அரசு, அறக்கட்டளைகள் அல்லது பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நகர்ப்புற பூங்காக்களின் மேலாண்மை பொதுவாக அவை அமைந்துள்ள நகர சபையின் பொறுப்பின் கீழ் வருகிறது. இதனால் இப்பூங்காக்களுக்கான விதிகள் மாறுபடலாம் என விளக்குகிறார் City of Sydney Council Greening and Leisure மேலாளர் Joel Johnson.

பொதுப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, நகரப் பூங்காக்களில் உள்ள விதிமுறைகள் அனைவருக்கும் இணக்கமான அனுபவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஏறக்குறைய அனைத்து நகர பூங்காக்களுக்கும் சில மேலோட்டமான விதிகள் பொருந்தும் என்றாலும், முகாமிடுதலுக்கான தடை போன்ற சில விதிமுறைகளில் வேறுபாடு உள்ளதாக Joel Johnson விளக்குகிறார்.
இரண்டு குழந்தைகளின் தாயும் Mamma Knows Melbourne இணையத்தளத்தின் இணை இயக்குநருமான Sammi Dobinson நகரத்தின் பெரும்பாலான பசுமையான இடங்களுக்குச் சென்றிருக்கிறார்.
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் பூங்கா விதிகள் பெரிதாக இல்லை என்றபோதிலும் தாவரவியல் பூங்கா போன்றவற்றில் மாறுபட்ட விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாக அவர் கூறுகிறார்.

பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் தொடர்பான நடத்தை சார்ந்த நெறிமுறைகள் என்று வரும்போது, பல அம்சங்கள் வெறுமனே நமது மனச்சாட்சி மற்றும் பொது அறிவுக்கு உட்பட்டவை என Sammi Dobinson கூறுகிறார்.
உதாரணமாக உங்கள் குப்பைகளை உங்களுடன் எடுத்துச் செல்வது அல்லது குழந்தைகள் சரியான அளவிலான விளையாட்டு உபகரணங்களில் விளையாடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழாவை நடத்த நீங்கள் உள்ளூர் பூங்காவைத் தேர்ந்தெடுக்கும்போது 'மற்றவர்களைக் கவனத்தில் கொள்ளுதல்' எதிர்பார்க்கப்படுகிறது.
நகர பூங்காக்களில் ஒரு சாதாரண ஒன்றுகூடலை ஏற்பாடு செய்யும் போது, barbecue செய்வதற்கான இடங்கள் மற்றும் பூங்காவிற்குள் உள்ள பிற பகுதிகள் பொதுவாக முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அதாவது first-come, first-served என்ற அடிப்படையில் அணுகப்படுகிறது.

இருப்பினும், திருமணங்கள் மற்றும் ஆண்டு இறுதி கொண்டாட்டங்கள் போன்ற குறிப்பிடத்தக்க கூட்டத்தை உள்ளடக்கிய அல்லது வணிக நோக்கங்களைக் கொண்ட செயல்பாடுகளுக்கு, முன்பதிவு அல்லது அனுமதி பெறுவது அவசியம் என்கிறார் City of Sydney Council Greening and Leisure மேலாளர் Joel Johnson.
அதேநேரம் நீங்கள் ஒரு barbecue party நடத்த திட்டமிட்டால், fire ban அறிவுறுத்தல்கள் மற்றும் wood-fire அல்லது charcoal fires தொடர்பிலான உள்ளூர் கவுன்சிலின் விதிகளை அதன் இணையதளத்தில் சரிபார்க்க மறக்காதீர்கள்.
உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தின் உள்ளூர் தீ ஆபத்து எச்சரிக்கைகள் மற்றும் தடைகளைச் சரிபார்ப்பதும் முக்கியம்.
பூங்காக்களில் உடற்பயிற்சி அல்லது ஆரோக்கியம் சார்ந்த வகுப்புகளை நடத்தும் தொழில்முறை பயிற்சியாளர்கள் நகர சபையிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கலாம் என பிரிஸ்பன் நகரை உதாரணமாகக்காட்டி விளக்குகிறார் Fitness Enhancement நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Scott Hunt.

பூங்காக்களுக்குள் வணிக நடவடிக்கைகளை நகரசபைகள் ஒழுங்குபடுத்துவதற்கான அடிப்படைக் காரணம் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரத்தை நிலைநிறுத்துவதாகும்.
பூங்கா விதிமுறைகள் தனிநபர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் இருவருக்கும் வெவ்வேறாக இருக்கின்ற பின்னணியில் ஏதேனும் நிச்சயமற்ற சூழ்நிலைகளில், பொறுப்புணர்வுடன் மரியாதைக்குரிய அணுகுமுறையை தேர்ந்தெடுப்பது சிறந்தது என Scott Hunt ஊக்குவிக்கிறார்.
உங்கள் மாநிலத்திலோ அல்லது பிராந்தியத்திலோ தீ ஆபத்து எச்சரிக்கைகள் மற்றும் தடைகள் பற்றி கீழே உள்ள வானிலை ஆய்வு மையத்தின் (BOM) இணைப்புகள் ஊடாக தெரிந்து கொள்ளுங்கள்:
New South Wales Fire Danger Ratings
Queensland Fire Danger Ratings
Western Australia Fire Danger Ratings
South Australia Fire Danger Ratings
Australian Capital Territory Fire Danger Ratings
Northern Territory Fire Danger Ratings
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.






