எழுத்தாளர் அ.முத்துக்கிருஷணன் தமிழகத்தில் தொடர்ந்து எழுதி வரும் இளம் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். சுற்றுப்புறச்சுழல், உலகமயம், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், மனித உரிமைகள், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர். முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்காக இந்த ஆண்டு தமிழகத்தில் வழங்கப்படும் பெரியார் மற்றும் அம்பேத்கார் விருதுகளை ஒரு சேர பெற்றவர். மதுரையில் பசுமை நடை என்கிற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். தொடந்து பல நாடுகளுக்கு பயணம் செய்யும் அ.முத்துக்கிருஷ்ணன் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அவரது ஆஸ்திரேலியப் பயணத்தில் அவர் கண்ட அனுபவங்கள் குறித்தும் அவரது செயற்பாடுகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். முத்துக்கிருஷ்ணனுடனான நேர்காணலின் முதல் பாகத்தை இங்கே காணலாம்: http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/australia-draws-me-again-and-again?language=ta