படகு மூலம் ஆஸ்திரேலியா வந்த ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முறை குறித்து மனித உரிமைகள் ஆணையமும் மன நல நிபுணர்களும் தம் கவலைகளைத் தொடர்ந்து பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.
படகு மூலம் ஆஸ்திரேலியா வந்தவர்களின் கோரிக்கைகளை மதிப்பிடும் முறை மற்றைய புகலிடக் கோரிக்கையாளரை மதிப்பிடும் முறையிலும் வித்தியாசமானது என்றும், இதனால் அவர்களுக்கு மன நல பிரச்சினைகள் உருவாகின்றன என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
உலகெங்கிலும் உள்ள சர்வதேச அகதிகள் சட்ட வல்லுநர்கள் சிட்னியில் சந்தித்து அகதிகளின் நிலையை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள்.
இது குறித்து Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.



