போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஓஸ்ரேலியர்களான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோருக்கு நாளை செவ்வாய்க்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோருக்கு இது பற்றிய உத்தியோகபூர்வமான அறிவித்தல் சனிக்கிழமை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியா சட்டத்தின் பிரகாரம், உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்ட பின்னர் குறைந்தபட்சம் 72 மணித்தியாலங்களுக்குள் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.
அந்தவகையில் இந்தோனேஷிய அதிபர் இறுதிநேரத்தில் இவர்களுக்கு கருணை காட்டாதவிடத்து நாளை செவ்வாய்க்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBS செய்திப்பிரிவிற்காக ஆங்கிலத்தில் Zara Zaherஎழுதிய செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
Share




