குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் முனைவர் ப்ரனேஷ் பத்மனாபன் அவர்கள் உருவாக்கியிருக்கும் ஒரு "கணித மாதிரி உரு" – mathematical model, Covid தொற்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு தடுப்பூசி எவ்வளவு திறமையாக எம்மைப் பாதுகாக்கும் என்பதை விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இந்த "கணித மாதிரி உரு" குறித்தும், அவரது ஆராய்ச்சிகள் குறித்தும் முனைவர் ப்ரனேஷ் பத்மனாபன் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




