Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

பஞ்சத்தைப் போக்கிய மகராசன், சுவாமிநாதன்.

Dr M S Swaminathan [7 August 1925 – 28 September 2023]
Dr M S Swaminathan [7 August 1925 – 28 September 2023]

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர் இவர். இவரின் பெயரில் அமைந்த, இலாப நோக்கற்ற அரசு சாரா நிறுவனம், எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation), கிராமப்புறங்களிலுள்ள வறிய பெண்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. எம். எஸ். சுவாமிநாதன் அவர்கள் தனது 98ஆவது வயதில், நேற்று (2023ஆம் ஆண்டு, செப்டம்பர் 28ஆம் நாள்) சென்னையில் காலமானார்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், இந்தியாவின் சிறந்த உயிரியல் சூழலியல் அறிவியலாளர்களில் ஒருவர். இவர் எம்.எஸ் சுவாமிநாதன் என்று பொதுவாக அறியப்படுகிறார். இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை என்று பரவலாக அறியப்பட்டவர் இவர். இவரின் பெயரில் அமைந்த, இலாப நோக்கற்ற அரசு சாரா நிறுவனம், எம். எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MS Swaminathan Research Foundation), கிராமப்புறங்களிலுள்ள வறிய பெண்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. எம். எஸ். சுவாமிநாதன் அவர்கள் தனது 98ஆவது வயதில், நேற்று (2023ஆம் ஆண்டு, செப்டம்பர் 28ஆம் நாள்) சென்னையில் காலமானார்.

எம். எஸ். சுவாமிநாதன் அவர்களை 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம், குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டிருந்தார். இரண்டு பாகங்களாகப் பதியப்பட்ட அந்த நேர்காணலின் நிறைவுப் பாகத்தில், விவசாயிகளுக்குண்டான சிக்கல்கள் குறித்தும், கொள்கை வகுப்பாளர்களின் சவால்கள் குறித்தும், அவரை விமரிசிப்பவர்களுக்குப் பதிலும், என்று மனம் திறந்து பேசுகிறார், விஞ்ஞானி சுவாமிநாதன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now