Key Points
- Bush tucker என்பது ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட உணவாகும் இது பெரும்பாலும் சத்தானது மற்றும் புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
- தென் அரைக்கோளத்தின் கோடைகாலத்துடன் bush tuckerக்கு ஒத்திசைவு உள்ளது என்று ஒரு நிபுணர் விளக்குகிறார்.
- பூர்வீக பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றி பேசுவது ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடி மக்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரு வழியாகும்.
ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட உணவுகள் குறிப்பாக பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களால் காலங்காலமாக உண்ணப்பட்டுவரும் உணவு வகைகள் Bush Tucker அல்லது Bush Food என அழைக்கப்படுகிறது. இவை சமையல் அல்லது மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பூர்வீக தாவரங்கள், விலங்குகள் அல்லது பூஞ்சைகளையும் கூட உள்ளடக்குகின்றன.
உங்கள் சமையலறையில் Bush Tuckerஐ சேர்த்துக்கொள்வது உணவைப் பற்றியது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவின் துடிப்பான கலாச்சார பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும் இருக்கும்.
இந்த பொருட்களின் தோற்றம் பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவது ஆஸ்திரேலிய மரபுகளின் செழுமையான பின்னணியை மதிப்பதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.
ஆஸ்திரேலியாவின் பூர்வீக பொருட்களையும் நமது சமையலறைக்கு கொண்டுவருவதற்கான விருப்பம் நமக்கு முதலில் ஏற்பட வேண்டுமெனச் சொல்கிறார் பூர்வீக குடி பின்னணி கொண்டவரும் First Nations Food Companion and Warndu Mai: Introducing native Australian ingredients to your kitchen நூலின் இணை ஆசிரியருமான Damien Coulthard.
அத்துடன் இந்த சுவையான ஆய்வுகளை மேற்கொள்ள பண்டிகைக் காலமே சிறந்த நேரம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

பூர்வீகப் பொருட்களைக் கொண்ட முற்றிலும் புதிய உணவு செய்முறையில் இறங்குவதற்குப் பதிலாக, உங்கள் வழக்கமான பொருட்களை பூர்வீக வகைகளுடன் மாற்றீடு செய்ய முயற்சிக்கலாம்.
உதாரணமாக, சாலட்களில், spinachக்குப் பதிலாக warrigal greensஆகவோ அல்லது asparagusக்குப் பதிலாக samphireஆகவோ மாற்றீடு செய்யலாம்.
முக்கிய உணவுகள் என்று வரும்போது, உங்கள் உணவை பூர்வீகப் பொருட்களைச் சேர்த்து marinate செய்வது அல்லது சுவையூட்டுவது பற்றி ஆராயுங்கள்.
பூர்வீக பொருட்களைக் கருத்தில் கொள்ளும்போது, தென் அரைக்கோளத்தின் கோடைகாலத்துடன் இப்பொருட்கள் ஒத்திசைவில் உள்ளன என்கிறார் பூர்வீக குடி மக்கள் தொடர்பிலான முன்னணி அமைப்பான Currie Countryஇன் நிறுவனர் Minyunbal பெண்மணி Arabella Douglas.

Arabella Douglas குடும்பத்திற்கு இறால்கள் மற்றும் நண்டுகள் எப்போதும் அவசியம். அதற்கேற்ற மசாலா மற்றும் சுவையூட்டிகளை தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் விளக்குகிறார்.
ஆஸ்திரேலிய பண்டிகைக் காலத்தில் Pavlovaக்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தும் இருப்பதால் அவற்றைத் தயாரிக்கும் போது பூர்வீக பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.
பண்டிகைக் காலத்தில் பயன்படுத்தும் குளிரான அல்லது சூடான பானங்கள், உங்கள் விருந்தினர்களுக்கு பூர்வீக பொருட்களின் சுவைகளை அறிமுகப்படுத்த நேரடியான மற்றும் ஈர்க்கக்கூடிய வாய்ப்பை வழங்குகின்றன. Finger limes மற்றும் Davidson plums ஆகியவை சோடாக்கள் மற்றும் Cocktailகளை மேலும் சுவையாக்கும், அதே சமயம் டானிக் அடிப்படையிலான பானங்களில் lemon myrtle கூடுதலாக விரும்பப்படுகின்றது.
பூர்வீக பொருட்களை சேர்க்கும்போது, அவற்றின் தோற்றத்தை கருத்தில் கொள்வதும் அதைப்பற்றி பேசுவதும் மதிப்புமிக்கது.
இது ஆஸ்திரேலியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையின் பாரம்பரியத்தைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் அனுமதிக்கிறது. இந்த பொருட்களின் தோற்றத்தைக் கொண்டாடுவதும் புரிந்துகொள்வதும் ஆஸ்திரேலியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மதிக்க ஒரு அர்த்தமுள்ள வழியாகும்.

ஆஸ்திரேலியாவின் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடுவதற்கான மற்றொரு வழி, பூர்வீக உணவுப் பொருட்களை உங்கள் தோட்டத்தில் வளர்ப்பதும் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.
உங்கள் உணவுகளில் நுட்பமான மாற்றங்களைச் செய்து, இந்த பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தைத் தழுவி கொண்டாடுங்கள். இந்த எளிய மாற்றங்கள் உங்கள் கொண்டாட்டங்களில் ஒரு தனித்துவமான மற்றும் சுவையான அனுபவத்தை வழங்கும்.
READ MORE
பூர்வீக மக்களின் ஓவியங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








