இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவங்கியது

Source: Raj
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று அழைக்கும் வகையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று துவங்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நேற்று 2783 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. 16,000 தடுப்பூசிக்காக பதிவு செய்து இருந்தாலும் அச்சம் காரணமாக பலர் தடுப்பூசி பெற முன்வரவில்லை.மக்கள் மத்தியில் அச்சம் போக இன்னம் சில நாட்கள் ஆகலாம் என்று கணிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுடன் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share