இலங்கையில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் புதிய ஆண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வில் இலங்கை அதிபர் நிகழ்த்திய உரையில் குறிப்பிடும்படியாக எதுமில்லை என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன. குறிப்பாக, தமிழர் இனப்பிரச்சினை, பொருளாதார நெருக்கடி என்பது குறித்து ஆளுந்தரப்பு தமது தீர்மானங்களை அறிவிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அடுத்து வரும் மூன்று ஆண்டு கால தமது ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அரசு கூறுகிறது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share



