எதிர்வரும் 25ஆம் திகதி அதாவது நாளை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு 07 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்ற தொல்பொருள் திணைக்களம், வன பரிபாலனத் திணைக்களம் போன்றவற்றின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராகவும், பாரம்பரிய தமிழர்களின் இடங்களை சிங்களமயமாக்கும் முயற்சி, மற்றும் பௌத்த, சிங்கள இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும், நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





