இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடும் அமளியில் முடிவடைந்தது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, நடைபெறும் ஆட்சி கலைக்கப்படவேண்டும் என்று எதிர்காட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவையில் தெரிவித்தார். பேர விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவும் அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் சபாநாயகர் தனபால் இதற்கு அனுமதி மறுத்தார்.அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையில் இருந்து வலுக்கட்டாயமா வெளியேற்றப்பட்டனர். பின்னர் திமுக எம்எல்ஏ-க்கள் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை வளாகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ-க்கள் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.மேலதிக விவரங்களுடன் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.