SKIP TO MAIN CONTENT

தமிழகப் பார்வை: உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் - OPS ன் உண்ணாவிரதம்

SBS தமிழ்
SBS தமிழ் Source: SBS தமிழ்

இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.


Published

Updated

By Praba Maheswaran

Source: SBS



Skip to podcast episode content

இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னேர்செல்வம் அணியினரின் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் லாபத்திற்காக பன்னேர்செல்வம் போராட்டம் நடத்துவதாக அதிமுக அமைச்சர்கள் குற்றம் சட்டி உள்ளனர். இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், பொதுமக்க‌ளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமியும் மீனவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி உறவினர்களும், பொதுமக்களும் தீர்க்கமாக தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now