சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு நாளை இடை தேர்தல் நடைபெற உள்ளது. ஜெயலலிதாவிற்கு பிறகு மக்களின் செல்வாக்கு யாருக்கு என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் போட்டியிடும் அரசியல் காட்சிகள் உள்ளதால், இந்த தேர்தல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரம் ஆர்.கே நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்படுவதால், தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற சுழலும் உருவாகியுள்ளது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, சிறிது நேரத்திற்கு முன்பு, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பழச்சாறு அருந்தும் வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் என்று வெளியிட்டார். ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அவர் சிகிச்சை பெற்ற காணொளி தற்போது வெளியாகியுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் இந்த காணொளி நாளை நடைபெற போகும் இடை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது? ஆர்.கே நகர் இடை தேர்தல் மற்றும் ஜெயலலிதாவின் சிகிச்சை காணொளி குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர்.