மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் மக்களின் மனநிலை என்ன என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டு காட்டிவிடும் என்பதால், தமிழகத்தின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் ஆர்.கே.நகர் இடை தேர்தலில் பெரும் ஆர்வத்துடன் களம் இறங்கியுள்ளன.டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக (பி.எச்.டி) படித்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள்.
Share




