SKIP TO MAIN CONTENT

சுஜித்தின் மாரணம் கற்றுத்தரும் பாடம் என்ன?

cc
Source: Raj

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்குழாய் கிணற்றில் சிக்கியபின், சிறுவனை மீட்க கடந்த ஐந்து நாட்களாக நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு சிறுவனின் அழுகிய உடலைத்தான் மீட்பு படையினரால் மீட்க முடிந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் போராடியும் சுமார் 80 மணி நேரத்திற்கு பிறகு, பாழடைந்த ஆழ்குழாய்க்குள்ளேயே சிறுவன் சுஜித் மரணித்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஜித்தின் மரணம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களையும் யோசனைகளையும் கூறி வருகின்றனர். இதே நேரம் அந்த சிறுவனின் மரணம் ஒரு மிக பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தியாவில் உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி தான் அது!!. சிறுவன் சுஜித்தின் மாரணம் நமக்கு கற்றுத்தரும் பாடம் என்ன? முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now