Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

தமிழக காவல்துறையினரின் கையுடைக்கும் கலாசாரம்

cc

தமிழக காவல்துறையினரின் கையுடைக்கும் கலாசாரம் தமிழகத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, போலீஸ் விசாரணைக்குச் செல்பவர்கள், காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிகரித்துவருகின்றன. போலீஸில் பிடிபடும் ரவுடிகள், கொள்ளையர்கள் உள்ளிட்டோரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அங்குள்ள பாத்ரூமில் வழுக்கிவிழுந்து கையை உடைத்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது. நேற்று புதுச்சேரியிலும் ஒரு ரௌடியை போலீஸ் துரத்தும் போது அவர் கீழே விழுந்து கை மற்றும் கால்களை உடைத்து கொண்டதாக செய்தி வெளியானது. இதற்கு முழு காரணம் போலீசார் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், குற்றம் செய்தவர்களுக்கு இத்தகைய தண்டனைகள் கொடுப்பது சரிதான் என்று பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதே நேரம் கைகளை உடைப்பதால் வாழ்நாள் முழுவதும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் போலீசார் இது போல செய்யக்கூடாது என்று மற்றொரு தரப்பினர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர். கையுடைக்கும் கலாச்சாரத்தை காவல்துறையினர் கையில் எடுத்து இருப்பது சரியா? தவறா? இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் எமது தமிழக நிருபர் ராஜ்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now