Members of the Patel community display placards as they attend a protest rally in Ahmedabad, India Source: Raj
மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்து சட்டம் நிறைவேற்றியது. இந்நிலையில் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசிப்பதற்கான அனைத்துக்கட்சிக் கூட்டம் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 3 கட்சிகள் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட 3 கட்சிகள் முழு ஆதரவு அளித்துள்ளன. 10% இடஒதுக்கீடு விவகாரம் குறித்து ஒரு பார்வை. முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.