சமீப காலங்களாக நடிகர் கமலஹாசன் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். தமிழகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாகவும், பீகாரை விட தமிழகம் லஞ்சம், ஊழலில் மோசமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்த கருத்திற்கு தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கமலஹாசனை மிரட்டும் வகையில் தமிழக அமைச்சர்கள் பேசியதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே போல் திரை துறையினர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தனது அரசியல் பிரவேசம் குறித்து, கவிதை வடிவில் நேற்று கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் சூசகமாக பதிவு செய்துள்ளார். கமலஹாசனின் அரசியல் பிரவேசம் நிஜமா அல்லது நடிப்பா?தமிழகத்தில் இருந்து ராஜ்.