ஒரே பாலினத் திருமணங்களை சட்டத்தில் ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற மக்கள் கருத்து வாக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது. இது குறித்து சமயத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற கருத்துப் பதிவு. பௌத்த மதம் என்ன சொல்கிறது என்பதை ஷக்தா அமரதுங்க என்ற உண்மையான பௌத்தர்; இஸ்லாமிய மதத்தின் பார்வையை சிட்னியில் இஸ்லாமிய மதகுருவாகப் பணியாற்றும், இமாம் யாஸீர்; கத்தோலிக்க திருச்சபையின் கருத்தை சிட்னியின் windsor நகரில் St Maththews Catholic திருச்சபையிலும், parramatta தமிழ் மறைமாவட்ட ஆன்ம குருவாகக் கடமையாற்றும் வணக்கத்துக்குரிய Robert Willaims; விக்டோரிய மாநிலத்தில் மெல்போர்ன் ஆங்கிலிகன் மறைமாவட்டத்தின் வழிகாட்டலில் இயங்கும் தமிழ் கிறிஸ்தவ சபையில் 1995ம் ஆண்டு 2006ம் ஆண்டுவரை போதகராகக் கடமையாறிய Revd Samuel Premarajah; இந்தியாவிலிருந்து வந்திருக்கும் இந்துமத சோதிடக்கலை விற்பன்னர் பண்டித் சாயி கிருஷ்ணா; சபரிமலை தேவஸ்தானத்தின் தந்த்ரி எனப்படும் பிரதான சமயக் குருவின் பேரன் ராகுல் ஈஸ்வர்; ஆஸ்திரேலிய இந்து மதக்குருக்களின் குழுவான Australian Council of Hindu Clergy என்ற அமைப்பின் பண்டித் ரமி* அவர்களின் பார்வை என்பவற்றோடு நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
* - SBS மலையாளம் நிறைவேற்று தயாரிப்பாளர் டீஜூ சிவதாஸ்ஸிற்கு நன்றிகள்.
Share





