அகதிகளுக்கு இலவச யோகா பயிற்சி
Danielle Begg Source: Refugee Yoga Project
இலண்டனில் அகதிகளுக்கும் போரின் வேதனையிலிருந்து விடுபட விரும்புவோருக்கும் இலவச யோகா பயிற்சி வழங்கும் ஹேக்னி யோகா திட்டத்தினைப் பார்த்ததிலிருந்து ஆஸ்திரேலியாவில் அப்படியான ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதென்று முடிவெடுத்துக் கொண்டார், ஆஸ்திரேலிய பெண்மணி டேனியல் ஃபெக் (Danielle Begg). ஆஸ்திரேலியாவில் அகதிகள் யோகா திட்டம் என்று ஒன்றை ஆரம்பித்து நடத்திவரும் டேனியல் ஃபெக் (Danielle Begg) அவர்களுடனும், இந்தத் திட்டத்தால் பயன் பெற்றுவரும் வினோதினி செல்வராசா என்ற புகலிடக் கோரிக்கையாளரிடமும் அகதிகள் யோகா திட்டம் குறித்து கேட்டு அறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள http://www.refugeeyogaproject.com/ என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.
Share