Native Title: மாபோ வழக்கு முதல் இன்றைய ஆஸ்திரேலியா வரை

Australia - Bungle Bungles - Eco Tourism

Tamba Banks of the Jaru tribe, whose family once lived in the Bungle Bungles, [known to her people as Billingjal], is one of the traditional owners of the Purnululu national park. Credit: Barry Lewis/Corbis via Getty Images

ஆஸ்திரேலியா அதன் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பூர்வீகக்குடி கலாச்சாரங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால் பூர்வீக நில உரிமை அங்கீகாரம் மற்றும் நில உரிமைகளைப் பொறுத்தவரை, அவற்றின் உண்மையான அர்த்தம் என்ன என்று பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். பூர்வீக நில உரிமை அங்கீகாரம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? என்பது தொடர்பில் Nikyah Hutchings ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


WARNING: This story contains the images and names of people who have passed.

Native title, நில உரிமைகள் மற்றும் Treaty ஆகியவை பூர்வீகக்குடி கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், பூர்வீகக்குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களை இந்த நிலத்துடன் இணைக்கவும் பயன்படுத்தப்படும் மூன்று வெவ்வேறு அணுகுமுறைகள் ஆகும்.

200 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆஸ்திரேலியா terra nullius என்று அறிவிக்கப்பட்டது, அதாவது "வெற்று நிலம்", அதாவது, வெள்ளையினத்தவர்களின் குடியேற்றத்துக்கு முன்பு இங்கு வாழ்ந்த பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெய்ட் தீவுமக்களை அங்கீகரிக்காத நிலை.

இந்தக் கதை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பால் மாறியது. அதுதான் மாபோ வழக்கு.
1982ல், எடி மாபோ தலைமையிலான Meriam மக்கள் குழு, டோரஸ் ஸ்ரெய்ட் பகுதியில் குயின்ஸ்லாந்தின் மேல் முனையில் உள்ள சிறிய தீவுகளான மர்ரே தீவுகளின் பாரம்பரிய உரிமையை அங்கீகரிக்கக் கோரி ஒரு வழக்கைத் தொடங்கினர்.

இந்த வழக்கு சுமார் பத்து ஆண்டுகள் நீடித்தது. பின்னர், 1992ல் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கி, Meriam மக்களுக்கு அவர்களின் நிலங்களின் மீது பூர்வீக உரிமை இருப்பதை அங்கீகரித்தது.

இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அது 'terra nullius' என்ற பல ஆண்டுகளாக நீடித்த கற்பனையை தலைகீழாக மாற்றியது.

அந்த முடிவைத் தொடர்ந்து, பூர்வீக நில உரிமைச் சட்டம் 1993- Native Title Act 1993 பெடரல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 15, 1993 அன்று, அப்போதைய பிரதமர் Paul Keating, உயர் நீதிமன்றத்தின் மாபோ வழக்கின் தீர்ப்பு ஒரு பொய்யை நிராகரித்து, ஒரு உண்மையை அங்கீகரித்துள்ளது என நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
Native title என்பது சில பூர்வீகக்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் இன்னும் தங்கள் நிலம் மற்றும் நீர்நிலைகளில் உரிமைகளைக் கொண்டுள்ளனர் என்பதை அங்கீகரிப்பதாகும். இந்த உரிமைகள் அரசுக்களால் வழங்கப்படுவதில்லை அல்லது பேச்சுவார்த்தை மூலம் உருவாக்கப்படுவதில்லை - அவை ஆஸ்திரேலிய நீதிமன்றங்களால் அங்கீகரிக்கப்படுகின்றன.

Native title என்பது “உரிமைகளின் தொகுப்பு” என்றே வர்ணிக்கப்படுகிறது, ஏனெனில் இது பல உரிமைகளை உள்ளடக்குகிறது.

இந்த உரிமைகளில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல், மற்றும் விழாக்களை நடத்துவதற்கு நிலத்தையும் நீரையும் பயன்படுத்துவது மற்றும் முக்கியமான கலாச்சார இடங்களை பாதுகாத்தல் போன்றவை அடங்கும்.

இது தனிப்பட்ட அல்லது வணிக நில உரிமையாக அல்ல, தலைமுறை தலைமுறையாக வந்த கலாச்சார மற்றும் ஆன்மீக மரபுகளை அடிப்படையாகக் கொண்ட குழு உரிமைகளைக் குறிப்பிடுகிறது.
GettyImages-830426724.jpg
Australian Prime Minister Paul Keating (1993).
இருப்பினும், பூர்வீக நில உரிமை அங்கீகாரம் என்பது விவசாயம், சுரங்கம் அல்லது உள்ளூர் அரச நடவடிக்கைகள் போன்ற பிற நிலப் பயன்பாடுகளை மாற்றாது. இதன் பொருள் பூர்வீகக்குடி மக்கள் பெரும்பாலும் விவசாயிகள், சுரங்கத் தொழிலாளர்கள் அல்லது கவுன்சில்கள் போன்ற மற்றவர்களுடன் நில உரிமைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பூர்வீகக்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ரெய்ட் தீவு சமூகங்களுக்கு, பூர்வீக உரிமை என்பது நிலத்தை விட மிக அதிகம் - இது அடையாளம், கலாச்சாரம் மற்றும் சொந்த உணர்வு பற்றியது என விளக்குகிறார் Yawuru தலைவரும் கல்வியாளருமான பேராசிரியர் Peter Yu.

ஆனால் அங்கீகாரம் பெறுவது எளிதல்ல.

பூர்வீக உரிமையை நிரூபிக்க பூர்வீகக்குடி சமூகங்கள் நிலத்துடன் தொடர்ந்த இணைப்பை காட்ட வேண்டும் — இது தலைமுறைகளாக கூறப்பட்ட வாய்மொழி வரலாறுகள், கதைகள், பதிவுகளின் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

சட்ட நடைமுறை சிக்கலானது, மேலும் பாரம்பரிய சட்டங்களும் பழக்கவழக்கங்களும் மேற்கத்திய சட்ட வடிவமைப்பில் எளிதாக பொருந்துவதில்லை.

அப்படியிருந்தும், பூர்வீக நில உரிமை அங்கீகாரம் உண்மையான மற்றும் நீடித்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

இது சமூகங்களுக்கு அவர்களின் மொழிகளை மீண்டும் உயிர்ப்பிக்கவும், நிலம் மற்றும் தண்ணீரைப் பராமரிப்பதற்கான பாரம்பரிய வழிகளை மீட்டெடுக்கவும், அவர்களின் பாரம்பரிய நிலம் மற்றும் நீர் பற்றிய முடிவுகளில் வலுவான பங்கை எடுக்கவும் உதவியுள்ளது.
Gwynette Govardhan.png
Yinhawangka Law Men Marlon Cooke (left) and David Cox ('Barndu') (right) with Gwynette Govardhan on Yinhawangka Country during a field trip to collect evidence (stories and land markings) of cultural heritage.
பூர்வீக நில உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, பூர்வீக நில உரிமை அங்கீகாரம் இப்போது ஆஸ்திரேலியாவின் சுமார் 40 சதவீதத்தை உள்ளடக்கியது, பெரும்பாலும் தொலைதூர மற்றும் பிராந்திய பகுதிகளில், நாட்டுடனான பாரம்பரிய தொடர்பு பராமரிக்கப்படுகிறது.

ஆனால் இது நில உரிமை (land ownership) போல அல்ல என்பதை நினைவில் கொள்ளுவது முக்கியம்.

நீங்கள் நகரம் அல்லது பிராந்தியத்தில் வாழும் ஒருவர் என்றால், பல புலம்பெயர்ந்தவர்களைப் போல பூர்வீக உரிமை உங்கள் தினசரி வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தாது. ஆனால் அதைப் புரிந்துகொள்வது மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு படியாகும் .

மாபோ தீர்ப்பைப் பற்றி குறிப்பிடும்போது முன்னாள் பிரதமர் Paul Keating கூறியது போல, பூர்வீக நில உரிமை அங்கீகாரத்தை நாட்டின் நில மேலாண்மை அமைப்புக்குள் கொண்டு வருவது பூர்வீகக்குடி மக்களுக்கு நீதி செய்யும் காரியம் மட்டுமல்ல, அது அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் முன்னேற்றகரமான ஒரு விடயமாகும். குறிப்பாக ஆஸ்திரேலியா — பூர்வீகக்குடி மக்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பான, வளமான இடமாக இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தும் வாய்ப்பு இதுவாகும்.

பல பூர்வீகக்குடி மக்களுக்கு, பூர்வீக நில உரிமை அங்கீகாரம் என்பது வெறுமனே சட்ட நடைமுறையல்ல — அது முன்னோர்களின் கதைகளை உயிருடன் வைத்திருக்கும் ஒரு வழி.
Gwynette Govardhan.jpg
Yinhawangka Country in the Pilbara region taken by Gwynette Govardhan during an on Country field trip.
ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வந்தவர்களுக்கு, பூர்வீக உரிமையைப் புரிந்துகொள்வது பூர்வீகக்குடி மக்கள் நிலத்துடன் கொண்டிருக்கும் ஆழமான தொடர்பைக் காண உதவுகிறது, இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது மற்றும் இன்றும் உயிருடன் உள்ளது.

பூர்வீகக்குடிமக்களுக்கு அவர்களுக்கான நில உரிமைகளை வழங்குவதற்கான புதிய ஒப்பந்தங்கள் நிலம், நீர் மற்றும் பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறைகளுக்காக எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை வடிவமைக்கின்றன.

நில உரிமைகள், Treaty, பூர்வீக நில உரிமை அங்கீகாரம் — இந்த மூன்றும் வெவ்வேறு சட்ட மற்றும் அரசியல் செயல்முறைகள். ஆனால் அனைத்தும் பூர்வீகக்குடி மக்களின் தேசங்களுடன் உள்ள தொடர்பை அங்கீகரித்து சுயநிர்ணயத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.

உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Audio of Prime Minister Paul Keating’s 1993 address courtesy of the National Archives of Australia (NAA).

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand