நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம் சார்பில் சமீபத்தில் “இனிய சுகப்பிரசவம் ஒரு வரம்” என்ற பெயரில் இலவச பயிற்சி முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் எதுவும் இல்லாமல், மருத்துவரிடமும் செல்லாமல், வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது சுகப்பிரசவம் என்றும், இதுவே சிறந்த வழிமுறை என்றும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டது. இதை விளம்பரப்படுத்திய ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது குறித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் கோயம்புத்தூர் கிளை தலைவர், டாக்டர் வினோத் ராஜ்குமார்; ‘ஹீலர்’ பாஸ்கர் நடத்தும் Anatomic Therapy Foundation என்ற அமைப்பின் ஆஸ்திரேலிய பிரதிநிதி சுபா ரத்தினவேல்; மற்றும் திரு பாஸ்கரின் வழக்கறிஞர் திரு. சென்னையப்பன் சுப்பிரமணியன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.