ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டின் போக்கு மாறி வருகிறது.
நூற்றாண்டின் தொடக்கம் வரை, ஐரோப்பிய குடியேறிகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ், 40 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய அணி பெரும்பாலும் உள்நாட்டில் பிறந்த வெள்ளையர்களாக இருந்ததை நினைவு கூர்ந்தார்.
"அப்போது எனக்கு நினைவிருக்கிறது, ஆஸ்திரேலிய அணியில் இருந்த குடியேறி Pascoe மட்டுமே", என்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச வீரர் Len Pascoeவைப் பற்றி அவர் Colours of Cricketஇடம் கூறினார்.
கடந்த 10 அல்லது 15 வருடங்களில் பல இந்திய, பாகிஸ்தான், இலங்கை வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் வெளியே முன்வந்து ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுகிறார்கள், அதைப் பற்றி பெருமையாகவும் நினைக்கிறார்கள்... அந்த நாட்டின் கடவுச்சீட்டு உங்களிடம் இருந்தால், அந்த நாட்டுக்காக விளையாட நீங்கள் தகுதியானவர்.Kapil Dev
Gideon Haigh, ஆஸ்திரேலியாவின் மிகவும் அதிகாரப்பூர்வமான கிரிக்கெட் பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவர். கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக கிரிக்கெட் விளையாட்டு குறித்து எழுதிவருகிறார். அவர் கபில்தேவின் கருத்துடன் உடன்படுகிறார்.
இப்போதெல்லாம் எந்த ஒரு பெருநகர கிரிக்கெட் கிளப்பிலும் புலம்பெயர்ந்தவர்களை பார்க்கக்கூடியதாக உள்ளதென திரு Haigh Colours of Cricketஇடம் கூறினார்.
தெற்காசிய புலம்பெயர்ந்தோர் பலருக்கு கிரிக்கெட் என்பது ஆஸ்திரேலியாவுடன் இணைவதற்கான எளிதான ஒரு வழி. அவர்கள் கிரிக்கெட் ஆடுகளத்தில் நண்பர்களையும் குடும்பத்தினரையும் காண்கிறார்கள்.
அப்படியான ஒருவரே Vaibhav Deshpande - புலம்பெயர்ந்தவரான இவர் விக்டோரியா மாநிலத்தில் கிளப் அளவிலான கிரிக்கெட்டை விளையாடி தனது கிளப்பின் கேப்டனாக தற்போது உள்ளார்.
தான் முதலில் சர்வதேச மாணவராக வந்தபோது ஆஸ்திரேலியாவில் தனக்கு குடும்பம் இல்லை என்கிறார் Vaibhav.
Saint Brigid’s St Louis கிரிக்கெட் கிளப்பின் சக உறுப்பினர் அவரை கிறிஸ்மஸ் மதிய உணவிற்கு அழைத்தபோது Vaibhav மகிழ்ச்சியடைந்தார்.
அது ஒரு அற்புதமான, அற்புதமான நடவடிக்கை.Vaibhav Deshpande
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தெற்காசிய வீரர்கள் ஏன் குறைவாக இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது உட்பட இன்னும் பல விடயங்கள் பற்றி Colors of Cricket முதல் பாகம் பேசுகிறது. நீங்கள் கேட்க தவறியிருந்தால் - முதல் பாகத்தை இங்கே கேட்கவும்
Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.
சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.
SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.
இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.
அடுத்துவரும் பாகங்களைத் தவறவிடாமல் செவிமடுப்பதற்கு SBS Radio App-இல் அல்லது Spotify , Apple Podcasts போன்ற உங்களுக்குப் பிடித்த Podcast செயலியில் Colours of Cricket-ஐ பின்தொடருங்கள். இந்த எட்டு பாகங்கள் கொண்ட தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளியிடப்படும்.
Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan
Lead Producer: Deeju Sivadas
Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli
Sound Design: Max Gosford
Program Manager: Manpreet Kaur Singh
Advisor: Patrick Skene
——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
பக்கத்திற்குச் செல்லுங்கள்.