ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தெற்காசிய வீரர்கள் ஏன் குறைவாக இடம்பெற்றிருக்கிறார்கள்?

Colours of cricket episode one 16-9.jpg

Gurinder Sandhu, Alana King and Usman Khawaja Credit: Getty AAP

தெற்காசியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட்டை ஒரு மதம் என்று பலர் தவறாக நினைக்குமளவுக்கு கிரிக்கட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இங்கே ஆஸ்திரேலியாவில், துணைக் கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள்தான் club கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். ஆனால் ஏன் மிகக்குறைவான தெற்காசிய வீரர்கள் மட்டுமே baggy green நிறத்தை அணிந்திருக்கின்றனர்?


ஆஸ்திரேலியாவின் பலதரப்பட்ட தெற்காசிய சமூகங்கள் ஒரே ஒரு விடயத்தால் ஒன்றுபட்டுள்ளன. கிரிக்கெட் மீதான காதல்தான் அது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து கிளப் கிரிக்கெட் வீரர்களில் 32% பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அல்லது ஆஸ்திரேலியாவில் குடியேறிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள்.

2019 ஆம் ஆண்டில் Fairfax Media இன் மற்றொரு அறிக்கை, ஆஸ்திரேலிய கிளப் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான மூன்று குடும்பப்பெயர்களில் இரண்டு இந்தியப்பின்னணி கொண்டது என்று கண்டறிந்தது. மிகவும் பிரபலமான குடும்பப்பெயர் சிங். பட்டேல் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. முதல் 30 இடங்களில் உள்ள பிற குடும்பப்பெயர்களில் குமார், ஷர்மா மற்றும் கான் ஆகியன அடங்குகின்றன.

ஆனால் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட்டின் அடிமட்ட அளவில் இத்தனைபேர் இருந்தபோதிலும், தெற்காசிய பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு சில வீரர்கள் மட்டுமே baggy green நிறத்தை அணிந்து ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

ஏறக்குறைய 470 ஆண் ஆஸ்திரேலிய வீரர்களில் நான்கு பேர் மட்டுமே தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்டுள்ளனர். பெண்கள் கிரிக்கெட்டில் இது இன்னும் குறைவு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தெற்காசிய வீரர்கள் ஏன் குறைவாக இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது உட்பட இன்னும் பல விடயங்கள் பற்றி Colors of Cricket முதல் அத்தியாயம் பேசுகிறது.

Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.

சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.

SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.

இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

அடுத்துவரும் பாகங்களைத் தவறவிடாமல் செவிமடுப்பதற்கு SBS Radi App-இல் Colours of Cricket-ஐ பின்தொடருங்கள்.

Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan

Lead Producer: Deeju Sivadas

Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli

Sound Design: Max Gosford

Program Manager: Manpreet Singh

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில்  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now