பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த உணர்வை குழந்தைகள் மீண்டும் பெற உதவுவதில் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதனை எவ்வாறு மேற்கொள்ளலாம் எனப் பார்ப்போம்.
இயற்கை பேரழிவுகள் அல்லது விபத்துகள், போர், வன்முறை, துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் குழந்தைகள் மன அதிர்ச்சியை அனுபவிக்கலாம் என விளக்குகிறார் ANUஇல் உள்ள மருத்துவம் மற்றும் உளவியல் பள்ளி மூத்த விரிவுரையாளர் மற்றும் மருத்துவ உளவியலாளர்
Dr Dave Pasalich.
தங்கள் குழந்தை சிரமப்படுகிறது மற்றும் அதற்கு உதவி தேவைப்படுகிறது என்பதை பெற்றோர்கள் அடையாளம் காண்பது மிகவும் முக்கியமான சவால்களில் ஒன்று என கூறுகிறார் சிட்னி பரமட்டாவில் உள்ள Community Migrant Resource Centre (CMRC)இல் Early Intervention Project Officerஆக கடமையாற்றும் Norma Boules.

மனஅதிர்ச்சி முக்கியமான வளர்ச்சிக் காலங்களில் ஏற்படும் போது, மூளையின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை அது ஆழமாக பாதிக்கும் என்று Dr Pasalich விளக்குகிறார்.
இதன் காரணமாக குழந்தைகள் அதிகரித்த கவலை மற்றும் பயத்திற்கு உள்ளாகக்கூடும் எனவும் Dr Pasalich கூறுகிறார்.
அப்படியானால் பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் குழந்தைகளுக்கு உதவ என்ன செய்யலாம்?
முதலில் பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்கள் சொந்த மன மற்றும் உணர்வு சார்ந்த நல்வாழ்வைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென சொல்கிறார் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசகராக கடமையாற்றும் Melanie Deefholts. நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது குழந்தைகளுக்கு சரியான உதவியை வழங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பெற்றோர்களும் பாதுகாவலர்களும் குழந்தையின் உணர்வுகள் மற்றும் தேவைகளுக்கு அதீத கவனம் செலுத்தும் அதேநேரம் குழந்தையின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவது சிறந்தது என Dr Pasalich ஆலோசனை சொல்கிறார்.
குழந்தையை மனஅதிர்ச்சியிலிருந்து மீட்க வேண்டுமெனில் வீட்டில் பாதுகாப்பான மற்றும் நிலையான சூழலை உருவாக்குவதும் முக்கியம் என Dr Pasalich விளக்குகிறார்.
பல குழந்தைகள் இயற்கையாகவே மன அதிர்ச்சி மற்றும் காயங்களிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்றபோதிலும் தொழில்முறை உதவியை நாட வேண்டிய நேரங்கள் உள்ளன.
Play therapy என்பது மனஅதிர்ச்சியிலுள்ள குழந்தைகள் அதிலிருந்து விடுபட மிகச் சிறந்த முறையில் உதவும் என்கிறார் சிட்னியில் உள்ள Be Centre Foundation இல் Play Therapist ஆக பணிபுரியும் Bree De La Harpe

நீண்டகாலமாக மனஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அதிலிருந்து விடுபடுவதற்கான உதவியை Play therapy ஊடாக பெற்றுக்கொள்ளலாம் எனச் சொல்லும் உளவியல் சிகிச்சை நிபுணர் Tiana Wilson, நிறைய மன அதிர்வுகள் அவர்களை அறியாமலேயே நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்.
இந்நிலையில் குழந்தைகள் அவர்களைச் சுற்றி சரியான ஆதரவைப் பெறும்போது மிகவும் சிக்கலான மனஅதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் என Dr Pasalich சுட்டிக்காட்டுகிறார்.
உதவி எங்கே கிடைக்கும்
- Your GP (doctor), mental health specialist, such as a psychiatrist, psychologist, counsellor or social worker
- Your local community health centre
- Australian Psychological Society Referral Service on 1800 333 497
- Phoenix Australia Centre for Post-traumatic Mental Health on (03) 9035 5599
- Centre for Grief and Bereavement on 1800 642 066
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





