ஒவ்வொரு தனிநபரையும் எடுத்துக்கொண்டால் அதிகமான கழிவுகளை உருவாக்குபவர்களில் ஆஸ்திரேலியர்கள் உலகின் மூன்றாவது இடத்தில் இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நமது குப்பைகளில் பெரும்பாலானவை குப்பைக்கிடங்கை சென்றடைகின்றன.
இதில் கவுன்சில்களால் சேகரிக்கப்படும் தேவையற்ற வீட்டுப் பொருட்களும் ஒரு பகுதியாகும்.
Hard rubbish என வகைப்படுத்தப்பட்ட பெரும்பாலான பொருட்கள் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்பதற்கு தளபாடங்கள் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறுகிறார் ஆஸ்திரேலியாவின் இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்பான Planet Arkக்கில் Senior Recycling Campaigns Managerராக உள்ள Alejandra Laclette.
ஆஸ்திரேலியாவில் hard rubbish சேகரிப்பில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: ஒன்று குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சேகரிப்புகள் மற்றையது booking-முன்பதிவு செய்யப்பட்ட சேகரிப்புகள். முன்பதிவு செய்யப்படும் முறையை தற்போது பெரும்பாலான கவுன்சில்கள் விரும்புகின்றன.
மீண்டும் பயன்படுத்த முடியாத அல்லது மறுசுழற்சி செய்ய முடியாத வீட்டுப் பொருட்களுக்கான சேகரிப்பு சேவையை வழங்குபவர்களில் சிட்னியின் Blacktown City கவுன்சிலும் ஒன்றாகும், அவர்கள் முன்பதிவு முறையைப் பயன்படுத்துகின்றனர்.

Hard rubbish சேகரிப்பு சேவைக்காக முன்பதிவு செய்யும் போது அல்லது அந்த சேவையைப் பயன்படுத்தும் போது, குடியிருப்பாளர்கள் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும், இதில் கழிவுகளின் அளவு , வகை மற்றும் அகற்றும் முறைகள் ஆகியவை அடங்கும்.
குறிப்பாக சேகரிப்பு தேதிக்கு முந்தைய மாலை வரை பொருட்களை வெளியே கொண்டுவந்துபோடக்கூடாது என்பது பொதுவான விதியாகும்.
இப்படியான நிபந்தனைகள் ஒரு கவுன்சிலிலிருந்து மற்றொன்றுக்கு வேறுபடும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்பதால், உங்கள் கவுன்சிலுடன் முன்கூட்டியே சரிபார்ப்பது நல்லது.

அதேபோன்று hard rubbish சேகரிப்பின்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருட்களும் கவுன்சிலுக்கு கவுன்சில் மாறுபடும்.
தளபாடங்கள், mattresses, basis of mattresses, washing machines, dishwashers, fridges & freezers, carpets & carpet underlay, scrap metal, timber, sheet glass உள்ளிட்டவை பொதுவாக hard rubbish ஆகக் கருதப்படும் பொருட்களுக்கான சில உதாரணங்களாகும்.
ஆனால் கட்டுமானப் பொருட்கள் oils, tyres, polystyrene உட்பட சில பொருட்களை hard rubbish ஆக அப்புறப்படுத்த முடியாது.

இதேவேளை மின்-கழிவுகளை(e-waste) குப்பைக் கிடங்கிற்குச் செல்லாதவாறு தடைசெய்துள்ள மாநிலங்களில் விக்டோரியாவும் ஒன்று. இதற்கமைய plug, battery அல்லது power cordடுடன் உள்ள e-wasteஐ விக்டோரிய மாநிலத்தில் உள்ள கவுன்சில்கள் சேகரிப்பின்போது ஏற்றுக்கொள்ள மாட்டா என்கிறார் Sustainability Victoria வின் இடைக்கால நிறைவேற்று அதிகாரி Matt Genever.
Hard rubbish சேகரிப்பின்போது paint-வண்ணப்பூச்சுகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தேவையற்ற வண்ணப்பூச்சுகள் Paintback என்ற நாடு தழுவிய இலவச சேவை ஊடாக அப்புறப்படுத்தப்படலாம்.
அதேவேளை மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் இரசாயனங்கள் உள்ளடங்கிய நச்சுத்தன்மையுள்ள வீட்டு கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுவதற்கான இலவச திட்டங்களையும் மேற்கொள்கின்றன.

நமது வீடுகளிலிருந்து நாம் அப்புறப்படுத்துவதற்குத் தீர்மானிக்கும் hard rubbishகளில் பயன்படுத்தும் நிலையில் உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என ஊக்குவிக்கிறார் Merri-bek கவுன்சிலர் Mark Riley.
ஆன்லைனில் ‘hard rubbish rescue’ குழுக்கள் உள்ளதாகவும் அங்கு பயன்படுத்தும் நிலையிலுள்ள பொருட்களின் புகைப்படங்களை அங்கத்தவர்கள் பதிவிடலாம் எனவும் கவுன்சிலர் Mark Riley சொல்கிறார்.

பயன்படுத்தும் நிலையிலுள்ள உங்கள் பொருட்கள் வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்ய பல்வேறு வழிகள் உள்ளன என்கிறார் Planel Arkகின் Alejandra Laclette. குறிப்பாக gumtree மற்றும் பேஸ்புக்கில் அவற்றை பதிவிடுவது அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பது என பல வழிகள் உள்ளதாக அவர் வலியுறுத்துகிறார்.
உங்கள் பகுதியில் hard rubbishகளை அகற்றுவதற்கான வழிகளைப் பற்றி அறிய உங்கள் உள்ளூர் கவுன்சிலை தொடர்புகொள்ளலாம். அதேநேரம் recyclingnearyou.com.au என்ற இணையதளத்திலும் பல தகவல்கள் உள்ளன.
Further information
- Visit your local council website for current information and resources in your area, including where to dispose of your household chemicals.
- Some jurisdictions circulate state-wide information on hazardous waste depots, including VIC,NSW, SA, WA, and the ACT
- To drop-off your unwanted paint and packaging, search for a Paintback location here.
- Go to recyclingnearyou.com.au for different solutions to dispose of your items responsibly anywhere in Australia.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




