ஆஸ்திரேலியாவில், பெரும்பாலான வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை. ஆகவே இதில் திறம்பட வேலைத் தேட , ஆஸ்திரேலிய தொழிலாளர் சந்தையைப் பற்றிய நுணுக்கமான புரிதலைப் பெறுவது அவசியம். வழமையான முறையில் விளம்பரமாகும் வேலை வாய்ப்புகளை மட்டுமே நம்பாமல், வாய்ப்புகளை பல்வேறு வகையில் தேடுவதற்கான வழிகளை முன்கூட்டியே ஆராய்வது முக்கியமானது.
வேலை தேடுவது என்பதே ஒரு தீவிரமான வேலையாகும்.
நீங்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவுடன், உங்கள் பணி உரிமைகளை உடனடியாகச் சரிபார்த்து, வேலை வாய்ப்புகளைத் தீவிரமாகத் தேட ஆரம்பிப்பது அவசியம் என்கிறார் NB Migration Law-இன் முதன்மை வழக்கறிஞர் Agnes Kemenes.
Seek, CareerOne மற்றும் Jora போன்ற வேலைவாய்ப்பு இணையதளங்களில் உங்கள் வேலை தேடலை ஆரம்பிக்கலாம். LinkedIn போன்ற சமூகத்தளங்கள் வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு துறைகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
வேலைக்கு ஆட்களை தேடி தரும் ஏஜென்சிகளை தொடர்பு கொள்வதற்கு இது உதவியாக இருக்கும் என்கிறார் Ms Kemene

இருப்பினும், வேலை தேடுவது என்பது வழக்கமான வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டது - ஏனெனில் பல வேலைகள் விளம்பரப்படுத்தப்படுவதில்லை
பல வேலை வாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்படாமல் இருப்பதால், ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்களின்
முதலாளிகளை நேரடியாக தொடர்பு கொள்வது மேலும் இங்குள்ள உங்களின் தொடர்புகள் கொண்டு வேலை வாய்ப்புகளை தேடுவதும் நல்லது.
இதில் Facebook போன்ற சமூக குழுக்களில் பல வேலை வாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. பல நிறுவனங்கள் வழமையான முறையில் விளம்பரம் செய்யாமல் சமூக ஊடகங்களை பயன்படுகின்றன.

பல புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் வேலைவாய்ப்பு சேவைகளையும் நீங்கள் அணுகலாம்.
எடுத்துக்காட்டாக, Settlement Services International (SSI) போன்ற சில தேசிய இலாப நோக்கற்ற நிறுவனங்கள், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பாதைகளுக்கு பல்வேறு பின்னணியில் உள்ளவர்களை அறிமுகப்படுத்துகின்றன.
SSI திட்டங்கள் குறிப்பாக அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களை குறிவைக்கின்றன என்று SSI-யின் வேலை வாய்ப்பு சேவைகளின் தலைவர் Joudy Lazkany கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக குடியேறியவர்களை அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வேலைவாய்ப்புத் திட்டங்கள் SSI உடன் இணைகிறது.
SSI உங்கள் திறன் தொகுப்பை மதிப்பிடுகிறது, உங்கள் பணி வரலாற்றை மதிப்பிடுகிறது மற்றும் உங்கள் தொழில் அபிலாஷைகளை கருத்தில் கொள்கிறது. இந்தத் திட்டங்களின் மூலம், ஆஸ்திரேலியத் தரத்தைப் பூர்த்தி செய்வதற்கும், வேலைச் சந்தையைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்கும் தங்கள் பயோடேட்டாவை எவ்வாறு வடிவமைப்பது என்பதையும் புதிய குடியேறிகள் கற்றுக்கொள்கிறார்கள்.
நீங்கள் வெளிநாட்டில் வேலை செய்திருந்தால், அந்தத் வேலை அனுபவத்தை எவ்வாறு இங்குள்ள சந்தைக்கு ஏற்றவாறு எவ்வாறு மொழிபெயர்க்கலாம் அல்லது ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் வாய்ப்புகளுடன் சீரமைக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதலை SSI வழங்க முடியும் என்று Ms. Lazkany கூறுகிறார்
புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு பெடரல் அரசின் Workforce Australia திட்டம் மற்றும் பிற சுயாதீன முயற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு சேவைகளையும் AMES Australia வழங்குகிறது.
புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பைக் கண்டுபிடிப்பதில் உள்ள தடைகளை அகற்றுவதே அவர்களின் நோக்கம்.
புலம்பெயர்ந்தோர் கொண்டு வரும் பலம், திறன்கள், தகுதிகள் மற்றும் வாழ்க்கை அனுபவத்தையும் AMES முன்னிலைப்படுத்துவதாக AMES ஆஸ்திரேலியாவின் பொது விவகார மேலாளர் Laurie Nowell கூறுகிறார்
இந்த திட்டங்கள் இலவசம்.
ஆஸ்திரேலிய பணியிடத்திற்கு திறன்சார் புலம்பெயர்ந்தோரை அறிமுகப்படுத்தும் Skilled Professional Migrants திட்டம் ஒன்றையும் AMES நடத்துகிறது
இந்தத் திட்டங்களைப் பற்றிய தகவலுக்கு, AMES இணையதளத்தை பார்வையிடவும்.

நீங்கள் ஒரு வர்த்தகராக ஆக ஆர்வமுள்ள ஒரு பெண்ணாக இருந்தால். உங்களை வழிநடத்த பல வளங்கள் உள்ளன.
பெண்களை வர்த்தகத்துடன் இணைப்பது NSW மாநில அரசின் முயற்சியாகும். SSI மூலம் இயங்கும் இத்திட்டம் வணிகங்கள் மற்றும் கட்டுமானத் துறையில் நுழையும் பெண்கள் இருவருக்கும் திறனையும் விழிப்புணர்வையும் உருவாக்குகிறது என்று SSI-இன் Joudy Lazkany கூறுகிறார்.
ஒருவேளை நீங்கள் பராமரிப்பு மற்றும் உணவகங்கள் தொழில்களில் வேலை செய்ய நினைத்திருக்கலாம். AMES ஆஸ்திரேலியா இந்தத் துறைகளில் தொழிற்பயிற்சியை நடத்துகிறது.
நீங்கள் விரும்பும் துறையில் தன்னார்வ தொண்டராக பணியாற்றுவதன் மூலம் நீங்கள் ஒரு வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
உங்கள் பணி மற்றும் உங்கள் அர்ப்பணிப்பில் நிறுவனம் மகிழ்ச்சியடையும் போது, உங்களுக்கு ஊதியம் கொண்ட பணி வழங்கப்படும். என்று ஊக்குவிக்கிறார் Agnes Kemenes.
எந்தவொரு விசா விண்ணப்பத்திற்கும் குடிவரவு நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான வலைத்தளங்களில் ஒன்று PayScale ஆகும். ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு தொழிலுக்கும் சராசரி சம்பள நிலை பற்றிய தகவலை இது வழங்குகிறது. வேலை தேடுபவர்கள் PayScale என்ற இந்த இணையதளத்திற்கு செல்வதன் மூலம் இங்குள்ள சம்பள நிலைகளை அறிந்துக்கொள்ளலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





