2019ம் ஆண்டளவில் சராசரியாக ஒவ்வொரு வீட்டிலும் 24 கருவிகள் இணையத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் என Cyber Security Strategy கணிப்பிட்டுள்ளது.
இப்படியாக அதிகரித்துவரும் இணையப் பாவனையால் இணையக்குற்றச்செயல்களும் கூடிக் கொண்டே செல்கின்றன.
இதனால் ஆண்டுதோறும் 1பில்லியன் டொலர்கள் அரசுக்கு செலவாவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே இணையக்குற்றச்செயல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பல விழிப்புணர்வுத் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
சைபர்கிரைம் எனப்படுவதை இன்டர்போல் இரண்டு வகையாகப் பிரித்துள்ளது.
ஒன்று கணணியின் ஹாட்வெயார் மற்றும் சாப்ட்வெயாரைத் தாக்குதல்.
மற்றையது இணையமூடான திருட்டு, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் தீவிரவாதச் செயற்பாடுகள்.
ஆனால் சர்வதேச ரீதியில் சைபர்கிரைமுக்குள் யார், எங்கே எப்போது அகப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்தறிவது மிகவும் கடினமானது.
இருப்பினும் பெரிய நிறுவனங்கள் சைபர்கிரைம் தாக்குதலுக்கு உள்ளாகின்றமை பொதுவாக நடக்கின்ற ஒன்று என Context, Information, Security ஐச் சேர்ந்த Technical Director Richard Davies தெரிவித்தார்.
இதேவேளை மக்களின் உளவியலில் தாக்கம் செலுத்தும் செயற்பாடுகள் மூலம் பல சைபர்கிரைம் செயற்பாடுகள் நடைபெறுவதாக Europol அமைப்பின் அறிக்கை கூறுவதாக Richard Davies தெரிவித்தார்.
அதேபோல் பலருக்கும் சில லிங்க்-இணைப்புக்களை அனுப்பி அதனூடாக அவர்களது தனிப்பட்ட தரவுகளைத் திருடலாம் என்பதால் அவதானமாக இருக்க வேண்டுமென Melbourne Cyber Security Hub இன் Threat Intelligence நிர்வாகி Stas Filshtinskiy எச்சரிக்கிறார்.
இணைய குற்றச்செயல்களிலிருந்து தப்பிப்பதற்கு கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் போதும் என்கிறார் Stas Filshtinskiy
இணையமூடாக எதிர்கொள்ளப்படும் மற்றுமொரு பிரச்சினை Cyber bullying ஆகும்.
ஆஸ்திரேலியாவிலுள்ள நான்கில் ஒரு மாணவர் Cyber bullying ஐ எதிர்கொள்வதாகச் சொல்கிறார் Cyber bullying க்கு எதிராக செயற்பட்டுவரும் Project Rockit இன் Caitlin Wood.
எப்படியான இணைய குற்றச்செயல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது குறித்த விழிப்புணர்வைப் பெற்றுக் கொள்வதில் ஆங்கிலத்தை முதல்மொழியாக கொண்டிராதவர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே இப்படியானவர்களுக்கு அதிகளவான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென Melbourne Cyber Security Hub இன் Threat Intelligence நிர்வாகி Stas Filshtinskiy சுட்டிக்காட்டியுள்ளார்.
இணையத்தை நாம் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது ஏதாவதொரு அம்சம் தொடர்பில் சிறிய சந்தேகம் எழுந்தால்கூட அதற்குக் கூடிய கவனம் செலுத்துவதன் மூலம் இலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நீங்கள் இணைய தாக்குதலுக்கு உள்ளாகியதாக உணர்ந்தால் 1300 363 992 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோரலாம்.
மேலும் இணைய பாதுகாப்பு குறித்த தகவல்களுக்கு www.staysmartonline.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.