உலகெங்கும் 35 ஆண்டுகளாக கலைப்பணி செய்துவரும் A P ஸ்ரீதர் அவர்கள் “இந்தியாவின் அருங்காட்சியக மனிதர் - Museum Man of India” என கொண்டாடப்படுமளவு பல அருங்காட்சியகங்களை நிர்மாணித்தவர். அவரின் ஓவியங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. இந்தியாவின் மாபெரும் ஆளுமைகளுடன் பணியாற்றியும், அவர்களை ஓவியங்களாக்கியிருக்கும் மாபெரும் கலைஞரான ஸ்ரீதர் அவர்கள் ஆஸ்திரேலியாவில் அருங்காட்சியகம் (Museum) அமைக்கும் திட்டத்துடன் சிட்னி வருகை தந்திருந்தார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சத்தித்து உரையாடினோம். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம்: 2
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.