இசையுடன் எவ்வித தொடர்பும் இல்லாத குடும்பப் பின்னணியிலிருந்துகொண்டு, தனது அதீத உழைப்பினால் கர்நாடக சங்கீதம் கற்று, Super Singer போட்டி நிகழ்ச்சி மூலம் திரையிசைக்கு அறிமுகமாகியவர் பிரபல பின்னணிப் பாடகர் சத்திய பிரகாஷ். இன்று மிகக் குறுகிய காலத்தில் இளையராஜா, AR ரகுமான் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களின் சுமார் 60க்கு மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள பிரபல பின்னணிப் பாடகர் சத்திய பிரகாஷ் எமக்களித்த நேர்முகம். அவரோடு உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
இலங்கை, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் மேம்பாட்டுக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன், அக்கல்லூரியின் பழையமாணவிகள் சங்கத்தின் NSW கிளையினர் 'மயக்கும் மாலை 2017' எனும் இசை நிகழ்ச்சி ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து, சூப்பர்சிங்கர் புகழ் பின்னணிப் பாடகர் சத்திய பிரகாஷ் மற்றும் பிரபல Keyboard நிபுணர் ராஜேஷ் ஆகியோரும், கனடாவிலிருந்து 'இலங்கையின் Global Super Star' புகழ் Geethiyaa Varman ம் வருகைதரவுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியப் புகழ் Eastern Empire இசைக் குழுவும் இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சி March மாதம் 4ம் திகதி, சனிக்கிழமை, மாலை 6:30 மணிக்கு, Blacktown Bowmen மண்டபத்தில் நடைபெறவுள்ளது.




