“பட்டிமன்றங்கள் இப்போது பொழுதுபோக்குத்தளங்களாக தேய்ந்துவிட்டன”

Source: SBS Tamil
தன்முனைப்புப் பேச்சு அல்லது மனிதனுக்கு உத்வேகம் தரும் மருந்தாய் அமையும் பேச்சுக் கலையில் பிரபலமானவரும், தமிழ் இலக்கிய ஆளுமையாகவும் வலம் வருகின்றவர் பேராசிரியை பர்வீன் சுல்தானா அவர்கள். பாரம்பரியங்களோடு வாழ்ந்து புதுமையான சிந்தனைகளோடு உலகெங்கும் தமிழுக்கும், தமிழருக்கும் சிறப்பு சேர்க்கும் பர்வீன் சுல்தானா அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் வர்த்தக சம்மேளனம் (Australian Tamil Chamber of Commerce) நடத்தும் “வாணிப வசந்தம் 2018” விழாவுக்காக சிட்னிக்கு வருகை தந்துள்ளார். அவரை நமது SBS ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்து உரையாடியவர் றைசெல். பாகம் – 1. “வாணிப வசந்தம் 2018” நிகழ்ச்சி நவம்பர் மாதம் 17 (சனிக்கிழமை) மாலை 5 மணிமுதல் Bowman Hall, 35 Campbell St., Blacktown NSW 2148 இல் நடைபெறுகிறது.
Share



