'கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நிர்வாகம் எடுத்த முடிவு' - செயலாளர்

Source: Parthy FB
சிட்னியிலுள்ள Wentworthville தமிழ்ப்பாடசாலையின் உயர்தர வகுப்பு ஆசிரியர்களில் ஒருவரான திரு நவரட்ணம் ரகுராம் அவர்களை பாடசாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், பாடசாலை நிர்வாகக்குழுவின் செயலாளர் திரு பார்த்தீபன் அவர்கள் அளித்துள்ள விளக்கம். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். சிட்னியில், முப்பது வருடங்களாக இயங்கிவரும் Wentworthville தமிழ்ப்பாடசாலை, ஆஸ்திரேலியாவிலேயே மிகப்பெரிய தமிழ்ப்பாடசாலை மட்டுமன்றி பல்கலாசார மொழிப் பாடசாலைகளிலேயே மிகப் பெரியதும் இதுவாகும். இப்பாடசாலையில், சுமார் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதுடன் 70க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ரகுராம் அவர்கள் பாடசாலை நிர்வாகம் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளைப் பின்வரும் இணைப்பில் கேட்கலாம்: https://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/audiotrack/interview-tamil-school-teacher-navaratnam-raguram?language=ta
Share