அடுத்த பத்து ஆண்டுகளில், 60 சதவீதமான தொழில்களை செய்வதற்கு digital skills எனப்படும் எண்முறை திறன் அவசியமாகத் தேவைப்படும் என்று ஒரு சர்வதேச ஆய்வு சொல்கிறது. ஆனால் அப்படியான பணிச்சூழலில் செயல்படுவதற்கான திறமை இங்கு வாழ்பவர்களில் கால்வாசிப் பேருக்கு இல்லை என்று RMIT அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை காட்டுகிறது.
Automation எனப்படும் தன்னியக்கம் பொருளாதாரத்தில் வகிக்கும் பங்கு அதிகரித்து வரும் வேளையில், அதற்குத் தேவையான திறன் நாட்டில் இல்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்து Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




