இசைக் கலைஞர் காயத்ரி பரத் படைக்கும் 10 வாரத் தொடர்: “கனா கண்டேன்”. காயத்ரி அவர்களின் ஆய்வு, இசைத் திறன், அதீத ஆர்வம் இவற்றால் உருவான தொடர் இது. பெண்ணியமும் இறையியலும் கலக்கும் இந்த தொடரில் தெய்வீகத்தை, மறைபொருளைத் தேடிய பெண்களின் வாழ்க்கையையும், அவர்களின் பாடல்களையும் (mystic women) காயத்ரி முன்வைக்கிறார். முதற்பாகம்: தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் பற்றியது. வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஆண்டாள் ஒருவரே பெண்ணாவார். Harmonium: Prashant Ramakarishnan Tabla: Abhijit Dan Mridangam: Sumukha Jagdeesh Tanpura: Ankita Bharat Studio: SBS Producer: RaySel.
Share




