நிதி வசதியற்றவர்களுக்கான இலவச சட்ட ஆலோசனை மையம்

Legal Aid

Legal Aid Source: Getty Images

சட்ட உதவிகள் செய்ய ஆஸ்திரேலியாவில் எட்டு Legal Aid ஆணையங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வந்த பாதிக்கப்பட்ட பின்தங்கியவர்களுக்கு உதவுவதே Legal Aid ஆணையங்களின் நோக்கமாகும். இது குறித்து ஆங்கிலத்தில் Wolfgang Mueller எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி


சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம், ஆனால் எல்லோருக்கும் தங்களுக்கான நீதியினை பெற்றுக்கொள்ள வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க போதுமான நிதி வசதி இருப்பது இல்லை.  ஆகவே  இப்படியானவர்களுக்கு சட்ட உதவிகள் செய்ய ஆஸ்திரேலியாவில் எட்டு Legal Aid ஆணையங்கள் உள்ளன.  ஆஸ்திரேலியாவிற்கு புதிதாக வந்த பாதிக்கப்பட்ட  பின்தங்கியவர்களுக்கு உதவுவதே Legal Aid ஆணையங்களின்  நோக்கமாகும். 
காங்கோ ஜனநாயக குடியரசுநாட்டிலிருந்து 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வந்த மாணவர் Claude Muco.தனது நாட்டில் நிலவும்   இன வன்முறை காரணமாக அங்கு திரும்பி செல்ல Claude பயப்படுகிறார்.  ஆனால் ஆஸ்திரேலியா தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ள எப்படி விண்ணப்பிப்பது என்று அவர் அறிந்திருக்க வில்லை அதற்கான சட்ட ஆலோசனை பெறவும் அவரிடம் போதுமான  நிதி வசதி இல்லை.
இந்த சூழலில் சிட்னி புறநகரான  Newtownல் உள்ள அகதிகள் மையத்திற்கு Claude சென்றபோது அவருக்கு Legal Aid பற்றி சொல்லப்பட்டுள்ளது.  இது அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்துள்ளது.
Claudeவிற்கு கிடைத்தது போன்ற சட்ட ஆலோசனை புதிதாக நாட்டிற்கு வரும் அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறுகிறார் Legal Aid NSW Refugee Serviceன் மூத்த வழக்கறிஞர்Jeremie Quiohilag
குடிவரவு விடயங்களை தவிர வீதி விதிமுறை மீறல் அபராதம், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் வாடகை முரண்பாடுகள்,  நுகர்வோர் முறைப்பாடு ஒன்றை எப்படி சமர்ப்பிப்பது அல்லது குடும்ப பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது போன்ற பல்வேறு விடயங்களுக்கும் Legal Aid ஆணையகத்தில் சட்ட ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
சிவில் வழக்குகள் மட்டும் அல்ல கிரிமினல் வழக்குகளுக்கும் Legal Aid உதவி பெற்றுக்கொள்ளலாம்.  1920ல் உருவாக்கப்பட்ட  Legal Aid ஆணையம் 1970ல்  Whitlam அரசாங்கத்தில்  விரிவடைந்தது.  பின்னர் வந்த அரசாங்கங்கள்  Legal Aid ஆணையங்களை ஒவ்வொரு மாநில மற்றும் பிராந்தியங்களில் நிறுவியது.  நம் நாட்டின் Legal Aidதிட்டம் உலகின் சிறந்த ஒன்றாகும் என்கிறார் Melbourneன் மேற்கு புறநகரங்களில் உள்ள சட்ட ஆலோசனை மையமான WestJusticeன்  நிர்வாக இயக்குனர் திருDenis Nelthorpe
உங்கள் மாநில மற்றும் பிராந்தியங்களில் உள்ள Legal Aid ஆணையங்களை பற்றி தெரிந்துக்கொள்ள  http://www.australia.gov.au/content/legal-aidஎன்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
நிதி வசதியற்றவர்களுக்கான இலவச சட்ட ஆலோசனை மையம் | SBS Tamil