நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்எ அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதை எளிதாக்கும் சட்டத்தை அரசு மீளப்பெற்றுள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்று, புகலிடக் கோரிக்கையாளருக்காகக் குரல் கொடுத்து வரும் பாலா விக்னேஸ்வரன் மற்றும் இந்த Medevac சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா வந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரும் புகலிடக் கோரிக்கையாளர் ராஜ் அவர்களுடைய கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.



