ஆஸ்திரேலியாவின் மையப்படுத்தப்பட்ட ஊடக அமைப்பும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும், நாம் ஆன்லைனில் பெறும் தகவல்களை கட்டுப்படுத்தும் சிக்கலான அமைப்பை உருவாக்கியுள்ளது. இது சமூகத்தையும் நம்பிக்கையையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் டிஜிட்டல் தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்றவை, அதிக கிளிக்குகளையும் , பார்வையாளர்களை ஈர்க்கும் நோக்கத்திலும், பரபரப்பூட்டும் தலைப்புகள் மற்றும் செய்திகளை வெளியிட ஊடக நிறுவனங்களை ஊக்குவித்து வருகின்றன.
இந்த நிலைமை பலரிடையே “ (learned helplessness) “ என்ற மனநிலையை உருவாக்கி வருவதாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் மைக்கேல் நோடெல் SBS Examines-க்கு தெரிவித்தார்.
மனிதகுலம் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள், நம்மால் ஒன்றும் செய்ய முடியாத அளவுக்குப் பெரியவை என்று தோன்றக்கூடும். அதன் விளைவாக நாம் செயல்படுவதில்லை.
“போர் மற்றும் மோதல்கள் போன்ற பிரச்சினைகள் குறித்து நாம் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் , தொடர்ந்து செய்திகளைப் பின்தொடர்வதன் மூலம் ஏதோ செய்கிறோம் என்ற உணர்வு மக்களுக்குள் உருவாகிறது,” என்று அவர் கூறினார்.
“உண்மையில் நாம் செய்யக்கூடிய முக்கியமான செயல்கள் இருந்தபோதிலும், எதையும் மாற்ற முடியாது என்ற உணர்வு பலரிடம் உருவாகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.
SBS Examines நிகழ்ச்சி ஆராயும் தலைப்பு: பெரிய ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆஸ்திரேலியர்கள் தினமும் பெறும் செய்திகளை எவ்வாறு வடிவமைக்கின்றன? மேலும், அவை உலகைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு பாதிக்கின்றன?
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
Meta, Media and Algorithms: Who decides what information we consume?
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand





