இல்மனைட் சுரங்கங்கள் மன்னார் தீவில் அமைக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்று அறிந்து கொள்ள, சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கும் Geological Survey & Mines Bureau – புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தையும் Central Environmental Authority என்ற மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் பலமுறை தொடர்பு கொண்டோம். அவர்களிடமிருந்து எந்தப்பதிலும் இந்த நிகழ்ச்சி ஒலியேறும்வரை எமக்குக் கிடைக்கவில்லை.
மன்னார் மண்ணில் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் தேடல் சர்ச்சையாகிறது

Jeremy Ahamed Liyanage (Executive Director), and Rojan of Bridging Lanka Source: Supplied
இலங்கையின் வடமேற்குப் பகுதியிலுள்ள மன்னார் தீவிலிருந்து ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணலைத் தோண்டியெடுக்கத் திட்டமிடுகிறது. இது குறித்து Bridging Lanka என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் Jeremy Ahamed Liyanage மற்றும் அதில் பணியாற்றும் றோஜன் ஆகியோரது கருத்துகளுடன் ஒரு விவரணம் படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share