Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

சிறு வலையொலி: On the back foot | நாம் பயன்படுத்தும் சொற்கள்

WWU_S2_EP4_On the back foot.png

ஆங்கிலத்தில், On the back foot என்று ஒருவர் கூறும்போது, அவர் ஒருவர் "பின்தங்கிய நிலையில்" அல்லது ஏதேனும் ஒன்று பாதகமான நிலையில் அல்லது சற்று சிக்கலில் இருக்கிறார் என்று அர்த்தம்.

ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘on the back foot' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொடர்’ ஆகும்.


Published

By Nick Pagano, Kulasegaram Sanchayan

Presented by Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


ஒரு புதிய சொற் தொடரைக் கற்றுக்கொண்டு, உங்கள் ஆங்கில மொழித்திறனை மேலும் அதிகரித்து, இயல்பாகவும் சுவாரஸ்யமாகவும் பேச கற்றுக் கொள்ளுங்கள். ‘on the back foot' போன்ற மரபுத்தொடர்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும் 'Words We Use' என்பது ஒரு ‘இரு மொழித் தொடர்’ ஆகும்.


on the back foot – கால்பந்து விளையாட்டில் இந்த சொற்றொடரை நீங்கள் கேட்கலாம். உண்மையில், கால்பந்தில் on the back footஇல் இருப்பது என்பது ஒரு வீரர் அல்லது அணி அழுத்தத்தில் இருப்பது மற்றும் கட்டுப்பாட்டில் இருக்க போராடுவதைக் குறிக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில், யாராவது on the back footஇல் இருப்பதாக சொல்லும்போது, அவர்கள் ஏதாவது குறைபாட்டில் உள்ளனர் அல்லது முழுமையாகத் தயாராக இல்லை என்று அர்த்தம்.

இன்று, நீங்கள் இதை பல விதமான சூழ்நிலைகளிலும் கேட்பீர்கள்.

கால்பந்து விளையாட்டில், ஒரு வீரர் இன்னொரு வீரருடைய எதிர்ப்பு முயற்சியை முறியடிக்கப் போராடும்போது அதைப் பயன்படுத்தலாம்:

  • Lucas has got James on the back foot - he’s too quick for him to handle!

ஒரு போட்டியின் போது அழுத்தத்தில் உள்ள ஒரு அணியை விவரிக்கவும் இதைப் பயன்படுத்தலாம்:

  • முதல் பாதியில் Barcelona அணி நன்றாக விளையாடியது, ஆனால் இப்போது Real Madrid அணி அவர்களை on the back foot வைத்திருக்கிறது!

பணியிடத்தில் விடயங்கள் சரியாக நடக்காதபோதும் அதைப் பயன்படுத்தலாம்:

  • இந்த நாட்களில் நாங்கள் எப்போதும் on the back foot என்பதாகத் தெரிகிறது, எங்கள் போட்டியாளர்கள் எங்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ஒரு கூட்டம் முடிந்த பிறகும் இதைப் பயன்படுத்தலாம்:

  • அந்தக் கூட்டத்தில் நான் on the back foot என்று உணர்ந்தேன், ஏனெனில் எல்லா தரவுகளும் எந்னிடம் இருக்கவில்லை.

நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தில் தயாராக இல்லை என்று சொல்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும், எடுத்துக்காட்டாக, ஒரு விவாதத்தில்:

  • அந்த தலைப்பைப் பற்றி அவர் என்னிடம் கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பேச வேண்டிய மீதமுள்ள காலத்திற்கு அவர் என்னை on the back footஇல் வைத்தார்!


நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் (Words we use) தொடர் முழுவதையும் கேட்க, இங்கே சொடுக்கவும்!


பங்களிப்பாளர்கள்

தொகுப்பாளர்: குலசேகரம் சஞ்சயன்

எழுதியவர்: நிக் பகானோ (Nick Pagano)

வரைபட வடிவமைப்பு: டோரி வாங் (Dory Wang)

கல்வி ஆலோசகர்: பேராசிரியர் லிண்டா யேட்ஸ் (Lynda Yates)

தயாரிப்பு: டோரி வாங்


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now