கட்டுப்பாடுகள் தளர்கின்றன. எல்லைமூடல் தொடர்கிறது. சரிதானா?

Source: Sasikumar Prabakaran
கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் கடந்த சுமார் இரு மாதங்களுக்கு முன்பு நாட்டில் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தொடர்ந்து தளர்த்த ஆரம்பித்துள்ளன. நாளை மேலும் கட்டுப்பாடுகள் தளர்கின்றன. இப்படி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை நீங்கள் வரவேற்கின்றீர்களா? இல்லை ஏன் இவ்வளவு அவசரம் என்று நினைக்கின்றீர்களா? அதிலும் குறிப்பாக சில மாநிலங்கள் தங்கள் எல்லையைத் திறக்கமாட்டோம் என்று பிடிவாதமாக இருப்பது சரிதான் என்றுபடுகிறதா? நேயர்களின் கருத்துக்களோடு தனது அனுபவத்தைப் பகிர்ந்தவர் - மேற்கு ஆஸ்திரேலிய மாநில தமிழ் சங்கத்தின் தலைவர் சசிகுமார் பிரபாகரன் அவர்கள்.
Share