உங்கள் பிள்ளை பாதுகாப்பான நீச்சல் வீரராக மாற உதவுவது இன்றியமையாதது. குறிப்பாக நீர்நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் போது இன்றியமையாததாகிறது.
அது கடற்கரையிலோ, நதியிலோ, ஏரியிலோ அல்லது உங்கள் உள்ளூர் குளத்திலோ எதுவாக இருந்தாலும், நீரை சுற்றி விளையாடுவதும் என்பது ஆஸ்திரேலியாவில் வளரும்போது அத்தியாவசியமாகிறது.
இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, குழந்தை நீரில் மூழ்குவது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது.
நீரில் மூழ்கிய சம்பவத்தைத் தொடர்ந்து சிட்னி மருத்துவமனைகளுக்குச் செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022-இல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக Sydney Children’s Hospitals Network and the New South Wales Ambulance அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
குறிப்பாக கோடை காலத்தில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக இளம் வயது பிரிவினர் எப்போதும் நீரில் விளையாடும் போது கண்காணிக்கப்பட வேண்டும் என்று மேற்கு சிட்னியில் உள்ள Westmead குழந்தைகள் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.வி.சௌண்டப்பன் எச்சரிக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு நீரில் மூழ்குவது முக்கிய காரணமாகும்.
சிறு குழந்தைகள் நீரில் மூழ்கும் சம்பவங்களுக்குப் பிறகு உடல்நலபாதிப்புகளை சந்திக்க நேரிடும் குறிப்பாக சிறு குழந்தைகள் சுமார் மூன்று நிமிடங்கள் தண்ணீருக்கு அடியில் மூழ்கி போய் இருந்தால் அவர்களுக்கு குறிப்பிடத்தக்க நரம்பியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அது அவர்களின் கற்றல் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார் டாக்டர் சவுண்டப்பன்.

நீச்சல் பயிற்சியைத் தொடங்க 'சிறந்த' வயது எது?
Stacey Pidgeon ஸ்டேசி பிட்ஜன் Royal Life Saving ராயல் லைஃப் சேவிங்கில் ஆராய்ச்சி மற்றும் கொள்கைக்கான தேசிய மேலாளராக உள்ளார்.
தொடர் கண்காணிப்பு, CPR பற்றிய அறிவு மற்றும் பெற்றோருக்கான முதலுதவி திறன்கள் மற்றும் சிறு குழந்தைகள் தவறுதலாக வீட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு சென்று விடாதபடி தடுப்புகள் ஆகியவை நீரில் மூழ்காமல் தடுப்பதற்கான காரணிகளில் அடங்கும் என்று அவர் கூறுகிறார்.
அனைத்து வயதினருக்கும் நீச்சல் பாடங்களில் நீர் பழக்கப்படுத்துதல் திறன் மற்றும் நீர் பாதுகாப்பு பற்றிய கற்றல் இன்றியமையாத அங்கமாக இருக்க வேண்டும் என Ms Pidgeon கூறுகிறார்.

National Swimming and Water Safety Framework தேசிய நீச்சல் மற்றும் நீர் பாதுகாப்புக் கட்டமைப்பு, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்களின் விரிவான பட்டியலைக் கோடிட்டுக் காட்டுகிறது.
மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன, அதில் முக்கியமானது 12 வயதிற்குள், ஒரு குழந்தை 50 மீட்டர் நீந்த வேண்டும், இரண்டு நிமிடங்கள் மிதக்க வேண்டும், மேலும் ஆடைகளுடன் மீட்பு மற்றும் முதலுதவி செய்ய வேண்டும். ஆறு வயது குழந்தைகளுக்கான அளவுகோல்கள் உள்ளன. ஆரம்பப் பள்ளியை விட்டு வெளியேறும் போது பிள்ளைகள் அந்த முக்கிய நீர் பாதுகாப்பு திறன்களைக் கொண்டிருப்பது அவசியம்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிப் பாடத்திட்டத்தில் மாணவர்கள் அவர்களின் ஆரம்பப் பள்ளிக் கல்வியின் ஒரு கட்டத்தில் நீச்சல் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆனால் குழந்தைகள் மிகவும் முன்னதாகவே தண்ணீருடன் பழக ஆரம்பிக்கலாம் அதாவது 6 மாத வயதிலிருந்தே நீச்சல் பழக்க ஆரம்பிக்கலாம் என்று கூறுகிறார் ஆஸ்திரேலிய நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Brendon Ward.

நீரில் மூழ்கும் ஐந்தில் ஒரு குழந்தை கலாச்சார ரீதியாக வேறுபட்ட பின்னணியில் இருந்து வந்துள்ளதாக டாக்டர் சவுண்டப்பன் மதிப்பிடுகிறார்.
வயது முதிர்ந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நீச்சல் பயிற்சி பெற்ற ஒருவர் என்ற முறையில், பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரையும் கற்றல் அனுபவத்தில் கூடிய விரைவில் ஈடுபட அவர் ஊக்குவிக்கிறார்.

Ms Pidgeon, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நீச்சல் பயிற்சிக்காக மாநிலம் மற்றும் பிரதேசங்களில் இருந்து கிடைக்கும் விளையாட்டு voucherகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.
உதாரணத்திற்கு NSW மாநிலத்தில் $200 பெறுமதியான Active Kids vouchers வழங்கப்படுகின்றன அதனை குழந்தைகளின் நீச்சல் பயிற்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோன்று Northern Territoryயிலும் இதே போன்ற voucherகள் வழங்கப்படுகின்றன.
Voucher Schemes for swimming/sports across states and territories
NSW
First Lap swimming vouchers for children aged 3 – 6 years old.
NT
Sports vouchers for primary school children.
Water Safety program for children under 5 years old
QLD
SA
Sports Vouchers form children 5 – 15 years.
TAS
Ticket to play vouchers.
VIC
Get Active Kids Voucher Program
WA
Kids Sport program
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




