Centrelink கொடுப்பனவுகள் தொடர்பாகத் தவறாகக் கடிதங்களை அனுப்பிய Robodebt திட்டம் குறித்து விசாரணை நடத்திய ஆணையர் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அரசு அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம் முரட்டுத்தனமானது மற்றும் கொடூரமானது என்றும், முன்னாள் பிரதமர் Scott Morrison உட்பட முக்கிய அமைச்சர்கள் மற்றும் துறை சார் ஊழியர்கள் தங்கள் கடமைகளில் தவறி விட்டனர் என்றும் Royal Commission விசாரணையைத் தலைமை தாங்கிய Catherine Holmes விவரித்துள்ளார்.
பகிரங்கமாக வெளியிடப்படாத அறிக்கையில், சிலர் மீது குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கட்டுரையாளரும் சம கால நிகழ்வுகளைக் கூர்ந்து அவதானிப்பவருமான ஆனந்தன் வசந்தா கிருஷ்ணமூர்த்தியுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




