SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் தமிழருக்கான புதிய கலாச்சார மண்டப முன்னெடுப்புகளும் எதிர்ப்புகளும்

Saiva Manram Divided on Community Hall Construction Plan. Source: Supplied / President of Saiva Manram, Mr. Sabaratnam Ketharanathan, Mr. Balasubramaniyam Sutharshan
சிட்னியில் கலாச்சார மண்டபம் ஒன்றினைக் கட்டுவதற்குறிய பாரிய முன்னெடுப்பினை சைவமன்றம் மேற்கொண்டுள்ளது. சுமார் 800 பேரை உள்ளடக்கக்கூடிய கலாச்சார மண்டபம் மற்றும் ஏறத்தாழ 200 வாகன நிறுத்துமிடங்கள் என்ற சைவமன்றத்தின் இத்திட்டத்துக்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இதன் பின்னணி பற்றி அறியும் நோக்குடன் இருதரப்பினருடனும் உரையாடினோம். இத்திட்டத்தினை முன்னெடுத்துள்ள சைவ மன்றத்தின் தலைவர் சபாரத்தினம் கேதாரநாதன் அவர்களுடனும், உறுதியாக எதிர்க்கும் அணியில் ஒருவரான சைவ மன்றத்தின் செயற்பாட்டாளர் பாலசுப்ரமணியம் சுதர்சன் அவர்களுடனும் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share