எளிய தமிழ் கடின அறிவியல்!
SciNirosh Source: SciNirosh
அறிவியலை ஆங்கிலத்தில் வாசித்தாலே நம்மில் பலருக்கு தலையை சுற்றும். ஆனால் ஆங்கிலத்தில் இருக்கும் அந்த அறிவியலை எளிய தமிழில் எழுதி, அதையே சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் புரியும் வகையில் சொல்லி, அதை இன்னொரு படி மேலேபோய் காணொளியாக்கி, YouTubeல் பதிவிட்டு ....இந்த பணி அவ்வளவு எளிதல்ல என்பதும், அதை இளைஞர் ஒருவர் இப்படி மிகவும் அர்ப்பணிப்போடு செய்கிறார் என்றால் நம்மால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்? SciNirosh என்று அறியப்படும் அந்த இளைஞர் ஜெர்மனி நாட்டில் வாழ்கிறார். Information Technology எனும் பிரிவில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை விரைவில் பெறவிருக்கும் அவரோடு ஒரு சந்திப்பு. SBS தமிழ் ஒலிபரப்பிற்காக அவரை சந்திக்கிறார்: குலசேகரம் சஞ்சயன். SciNirosh Show
Share