SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
நாடுகடத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு சிறை - புதிய சட்டம் நிறைவேறப்போகிறது!

Source: AAP
ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டமுன்வடிவு குறித்து ஆய்வு செய்த செனட் விசாரணை குழு, இந்த சட்டமுன்வடிவு நிறைவேற ஆதரவு வழங்கியுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் SBS News -இற்காக Rania Yallop தயாரித்த விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share