கடந்த வருடம் நாட்டிலுள்ள பத்தில் 3 இளைஞர்கள் மது அருந்தியிருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
அது மட்டுமல்ல 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 15 வீதமான இளைஞர்கள் cannabis பயன்படுத்திப் பார்த்திருக்கும் அதேநேரம் ஐம்பதில் ஒருவர் cocaine அல்லது amphetamines ஐ பயன்படுத்தியிருக்கிறார்.
இதில் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் விதிவிலக்கல்ல.

Source: Getty Images
வியட்நாமில் பிறந்த டேவிட் தனது 8வது வயதில் ஒரு அகதியாக சிட்னியில் குடியேறினார்.
ஏனைய பல இளைஞர்களைப் போல டேவிட்டின் முதலாவது marijuana அனுபவம் high school இல் கல்வி கற்கும் போது நடந்திருக்கிறது.
அதன் பின்னர் தனது 19வது வயதில் ஹெரோயின் பாவிக்க ஆரம்பித்தார்.
ஹெரோயின் பாவனைக்கு அடிமையான டேவிட் ஒரு போதைப் பொருள் விற்பனை முகவராகவே மாறிவிட்டார். இதனால் சிறைக்கும் சென்றார்.
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேல் போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த டேவிட்டின் இந்தப் பழக்கம் பற்றி அவரது பெற்றோருக்குத் தெரிந்திருக்கவில்லை.
தற்போது போதைப்பொருள் பழகத்திலிருந்து விடுபட்டுள்ள டேவிட் தொடர்ந்தும் மனவள ஆலோசனைகளைப் பெற்றுவருகிறார்.
டேவிட் போல பல இளைஞர்கள் தமது வாழ்நாளில் ஓரிரு தடவைகள் மது அல்லது போதைப் பொருளை பயன்படுத்திப் பார்ப்பதாக நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மது மற்றும் போதைப்பொருள் குறித்த தேசிய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் Maree Teeson சொல்கிறார்.

Source: SBS
இதேவேளை புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் புதிய நாடொன்றில் வாழ ஆரம்பிக்கும் போது ஏற்படும் அழுத்தங்களால் போதைப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதாக Drug and Alcohol Multicultural Education Centre ஐச் சேர்ந்த Kelvin Chambers தெரிவித்தார்.
அதேபோல் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களும் இதற்குள் அடங்குவதாக Youth Drug and Alcohol Advice Service ஐச் சேர்ந்த Dom Ennis கூறுகிறார்.
எனவே உங்கள் பிள்ளைகள் அல்லது உறவினரின் நடவடிக்கைகளில் ஏதாவது சந்தேகம் எழுந்தால் அதைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடுமாறு நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மது மற்றும் போதைப்பொருள் குறித்த தேசிய ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் Maree Teeson ஊக்கப்படுத்துகிறார்.
புலம்பெயர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படையாகப் பேச விரும்புவதில்லை எனத் தெரிவித்துள்ள Drug and Alcohol Multicultural Education Centre ஐச் சேர்ந்த Kelvin Chambers இந்த நிலையை மாற்றி அவர்கள் தேவையான உதவிகளைப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறார்.

Source: SBS
மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை www.drugs.health.gov.au என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது 1300 368 186 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படுபவர்கள் 131 450 என்ற இலக்கத்தை அழைக்கலாம்
For help in your state visit the Alcohol and Drug Information Service (ADIS).
Drugs: the real facts booklet and tips for parents is available in 13 languages.