அரசு நடைமுறைப்படுத்துகின்ற Adult Migrant English Program இலவச ஆங்கிலக் கல்வித் திட்டன்படி புகலிடக்கோரிக்கையாளராகவோ அல்லது வேறு ஏதாவது விசா ஒன்றினூடாகவோ நாட்டிற்குள் புதிதாக குடியேறிய ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டிராத ஒருவர் சுமார் 550 மணித்தியாலங்கள் ஆங்கிலம் படிக்கலாம் எனச் சொல்கிறார் AMES Australia அமைப்பைச் சேர்ந்த Laurie Nowel.
நாடு முழுவதுமுள்ள 250 இடங்களில் முழுநேரப் படிப்பாகவோ அல்லது பகுதிநேரமாகவோ அல்லது இணையம் வழியாகவோ நீங்கள் ஆங்கிலம் கற்கலாம்.

Source: Getty Images
உங்களது ஆங்கில அறிவு எந்த நிலையில் உள்ளது என்பதற்கேற்ப கற்பித்தல் செயற்பாடுகள் அமையும் எனச் சொல்கிறார் Laurie Nowel.
அதேநேரம் எந்தமொழியிலும் எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு முதலில் அவர்களது தாய்மொழி எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு அதன் பின்னர் ஆங்கிலக் கல்வி சொல்லிக்கொடுக்கப்படும்.
இந்த இலவச ஆங்கில பயிற்சி நெறியை மேற்கொள்ள விரும்புபவர்கள் தமது அமைப்பைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என ஊக்குவித்துள்ள Laurie Nowel ஆஸ்திரேலியாவில் வேலை தேடும்போது ஆங்கில எழுத்தறிவு அவசியம் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது என்கிறார்.

இதை ஆமோதிக்கின்ற ஆப்கானைச் சேர்ந்த Mehako Obaidullah ஆங்கில மொழி அறிவானது தன்னைப் போன்ற புகலிடக்கோரிக்கையாளர்கள் இங்கே வாழ்க்கையை நல்ல முறையில் ஆரம்பிப்பதற்கு உதவியாக அமையுமென்கிறார்.
Adult Migrant English Program குறித்த மேலதிக விபரங்களைத் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்ள http://www.education.gov.au/amep-information-other-languages என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். அல்லது AMES Australia ஐ 13 26 37 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.