Child Care சேவை தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்

Childcare centre

Childcare centre Source: Getty Images

ஆஸ்திரேலியாவில் பலரும் பயன்படுத்தும் சேவைகளில் மிக முக்கியமானது Child Care. இதைப்பற்றிய பல அடிப்படை விடயங்களை உள்ளடக்கி Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.


child care  எனப்படும் குழந்தைகள் பராமரிப்பு சேவை ஆஸ்திரேலியாவில் பலரும் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு சேவையாகும்.

பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு இச்சேவை ஒரு வரப்பிரசாதமாகும்.

ஆஸ்திரேலிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த 2014இல் நாட்டிலுள்ள 12 வயதுக்கு உட்பட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட சிறுவர்கள் child care சேவையைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

உங்களது குழந்தையையும் child care  மையத்தில் சேர்க்க விரும்பினால் எங்கே? எத்தனை மணித்தியாலங்களுக்கு? எப்படியான இடம்? என பல விடயங்கள் தொடர்பில் ஆராய வேண்டுமெனச் சொல்கிறார் Early Childhood Australia வின் நிறைவேற்று அதிகாரி.

pre-school  செல்லும் குழந்தைகளையுடைய பெற்றோருக்கு Long day care பொருத்தமானதாகும்.

இது தவிர Family day care எனப்படும் வீட்டிலேயே சிறுவர் பராமரிப்பு சேவையை வழங்குமிடங்களும் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் பாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக சிறுவர்களைப் பராமரிக்கும் இடங்களும் இயங்குகின்றன.

இதேவேளை Child Care Benefit , Child Care Rebate ஆகியவற்றின் மூலம் தகுதிபெறும் குடும்பங்களுக்கு Child Care  உதவிகள் அரசிடமிருந்து கிடைக்கின்றன.

எது எப்படியிருப்பினும் தடுப்பூசிகளை ஒழுங்காகப்போட்டுக்கொள்ளும் பிள்ளைகள் மாத்திரமே உhடைன உயசந  கொடுப்பனவுகளுக்குத் தகுதி பெறுவர்.

மேலும் child care  கொடுப்பனவு பெறும் குடும்பங்கள் தம்மை centrelinkஇல் பதிவு செய்திருக்க வேண்டுமென்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நிலையத்திலேயே தமது பிள்ளைகளை சேர்க்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் என்னவிதமான child care  சேவையைப் பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதைப் பொறுத்து அதற்கான செலவுகளும் வேறுபடும்.

எனவே child care சேவையைப் பெறுவதற்கு முதல் அரச கொடுப்பனவு எவ்வளவு கிடைக்கும் என்பதை centrelinkஇடம் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

பல முக்கிய நகரங்களிலுள்ள child care  சேவை மையங்களில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பலர் காத்திருப்பதால் நீங்கள் முன்கூட்டியே  பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

child care சேவை குறித்த மேலதிக விபரங்களுக்கு www.mychild.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

To find out about accessing financial assistance visit www.humanservices.gov.au

You can check the quality ratings of a service provider by visiting www.acecqa.org.au


Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
Child Care சேவை தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் | SBS Tamil